எஸ். இராமநாதன் (இசைக் கலைஞர்)

இந்திய இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

முனைவர் சு. இராமநாதன் (Dr. S. Ramanathan, 8 ஏப்ரல் 1917 - 19 மார்ச்சு 1988) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை வாய்ப்பாட்டு, வீணை வாத்திய கலைஞரும் இசையாளரும் (musicologist), இசை ஆராய்ச்சியாளரும் ஆவார்.[1][2]

இளமைக் காலம்

சுப்பிரமணிய சாஸ்திரி, பட்டம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்[1].

இசைப் பயிற்சி

ஏழாவது வயதில் இசைப் பயிற்சி தொடங்கினார். முதலில் திருக்கோயிலூர் இராமுடு பாகவதரிடமும் மணலூர்ப்பேட்டை சுப்பிரமணிய தீட்சிதரிடமும் இசை பயின்றார்[1] .
பின்னர் டைகர் வரதாச்சாரியார், தஞ்சை க. பொன்னையா பிள்ளை, திருவையாறு சபேச ஐயர், சாத்தூர் கிருஷ்ண ஐயங்கார், மதுரை சுப்பிரமணிய ஐயர், தேவகோட்டை நாராயண ஐயங்கார் ஆகியோரிடம் இசை கற்றார்.[1].

கல்வி

Remove ads

இசை வழி

இராமநாதன் இசைக்கச்சேரிகள் செய்யும்போது தான் பாடும் சாகித்தியத்தின் வரிகளையும் அவற்றின் முழு கருத்தையும் தெரிந்துகொண்டு பாடுவார்[2].
மதுரைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீ சத்குரு சங்கீத வித்தியாலயாவில் முதல்வராக பணியாற்றியுள்ளார். அமெரிக்கா கானக்டிகட் மாநில வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.[3]
அவரிடம் இசை பயின்ற மாணவர்கள் ஏராளம். அவர்களில் பலர் இப்போது மிகப் பிரபலமாக இருக்கிறார்கள்.
பி. உன்னிகிருஷ்ணன், எஸ். சௌம்யா, சாவித்திரி சத்தியமூர்த்தி, கீதா பென்னெட் (வீணை), சீதா நாராயணன், வசுமதி நாகராஜன், சுகன்யா இரகுநாதன் (வீணை) பானுமதி இரகுராமன் (வாய்ப்பாட்டு, வீணை), வித்யா ஹரிஹரன் (வாய்ப்பாட்டு, வீணை), வானதி இரகுராமன், பத்மா இராதாகிருஷ்ணன், பத்மா காடியர் (வீணை), மற்றும் பலர் அவரிடம் வாய்ப்பாட்டு, வீணை இசை கற்றுக்கொண்டார்கள்.[1]
பாடலை முழுமையாக மனனம் செய்ய வேண்டும், அவற்றின் பொருள் தெரிந்து கொள்ள வேண்டும், பாடலை இயற்றியவர் யாரென தெரியவேண்டும் என மாணவர்களுக்கு கூறுவார்[2].
அவரிடம் இசை பற்றி யார் என்ன கேட்டாலும் எந்த ஒரு புத்தகத்தையோ, குறிப்பையோ பார்க்காமல் பதில் சொல்லுவார். இசையைப் பொறுத்தவரை அவர் ஒரு நடமாடும் களஞ்சியமாகத் திகழ்ந்தார்[2].
அவரது இறுதிக் காலத்தில் ஒரு நாள் அவரது மகள் கீதா பென்னட் தான் புதிதாக கற்றுக்கொண்ட இக நைன நா என்ற புஸ்பலதிகா இராக பாடலை அவருக்குப் பாடிக் காண்பிக்க விரும்பினார். ஆனால் அப்பாடலை இயற்றியவர் யாரென அவருக்குத் தெரியவில்லை. மரணப் படுக்கையில் இருந்த தந்தையிடம் கேட்டார். அரை மயக்க நிலையிலும் இராமநாதன் மெலிதான குரலில் "திருப்பதி நாராயணசாமி" எனப் பதில் கூறினார்[2].
சுப்பாராம தீட்சிதரின் சங்கீத சம்பிரதாய பிரதர்சினி என்ற நூலை பி. ராஜம் ஐயர் தமிழில் மொழிபெயர்த்தபோது அவருடன் சேர்ந்து பணியாற்றினார். பல நிறுவனங்களில் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.[1]

Remove ads

விருதுகள்

இறப்பு

இருதய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில காலம் உடல் நலமின்றி இருந்த[2] முனைவர் எஸ். இராமநாதன் 1988 மார்ச்சு 19, அன்று சென்னையில் காலமானார்[1] அவரது மகள் முனைவர் வானதி இரகுராமனும், எஸ். சௌம்யாவும் பாடிய சுருட்டி இராகத்தைக் கேட்டுக் கொண்டு அவர் உயிர் பிரிந்தது[2].

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads