ஏ. எம். ஜெயின் கல்லூரி
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
12.985006°N 80.179644°E ஏ. எம். ஜெயின் கல்லூரி (A.M. Jain College) என்பது தமிழ்நாட்டின், சென்னைக்கு அருகிலுள்ள மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1952 ஆம் ஆண்டு எஸ். எஸ். ஜெயின் கல்விச் சங்கத்தால் துவக்கப்பட்டது. இங்கு கலை, அறிவயல், காட்சி ஊடகப் படிப்புகளுடன் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளை வழங்கப்படுகிறது. இக்கல்லூரி வளாகமானது மீனம்பாக்கம் தொடருந்து நிலையத்தின் எதிரே அமைந்துள்ளது. ஜெயின் சமுதாய சங்கத்தால் நிர்வகிக்கப்படும் இக்கல்லூரியானது சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்றுள்ளது.[1][2]
2006-2007 ஆம் ஆண்டில் இந்த கல்லூரியானது இந்தியாவின் தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) அங்கீகாரம் பெற்றது .
Remove ads
கண்ணோட்டம்
கல்லூரியில் பி.எஸ்.சி, பி.காம், பி.சி.ஏ, எம்.எஸ்சி (ஐ.டி), எம்.ஏ (தகவல்தொடர்பு) போன்ற படிப்புகளை மலை நேரப்பிரிவிலும் நடத்துகிறது. இந்தக் கல்லூரியில் இரண்டு நூலகங்கள் உள்ளன. இக்கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் என்பவை ஆண்டின் இரண்டு கொண்டாட்டங்களாக உள்ளன. கல்லூரியின் தொழில்முறை விளையாட்டுத் பிரிவனது அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது.
படிப்புகள்
முதல் பணிநேரம்
இளங்கலை படிப்புகள்
- பி.எஸ்சி வேதியியல்
- பி.ஏ. மெய்யியல்
- பி.ஏ ஆங்கிலம்
- பி.எஸ்சி கணிதம்
- பி.எஸ்சி இயற்பியல்
- பி.எஸ்சி கணினி அறிவியல்
- பி.காம் பொது
- பி.காம் பெருவணிக செயலாளர்
முதுகலை படிப்புகள்
- எம்.ஏ பொருளாதாரம்
- எம்.எஸ்.சி கணிதம்
- எம்.எஸ்சி இயற்பியல்
- எம்.எஸ்.சி வேதியியல்
- எம்.காம்
ஆராய்ச்சி படிப்புகள்
- ஆய்வியல் நிறைஞர் கணிதம் (முழு நேரம்)
- ஆய்வியல் நிறைஞர் & முனைவர் பொருளியல்
- ஆய்வியல் நிறைஞர் & முனைவர் இயற்பியல்
- ஆய்வியல் நிறைஞர் வணிகவியல் (முழுநேரம்)
இரண்டாம் பணிநேரம்
இளங்கலை படிப்புகள்
- பி.ஏ சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை
- பிபிஏ வணிக நிர்வாகம்
- பிசிஏ கணினி பயன்பாடுகள்
- பி.காம் ஹானர்ஸ்
- பி.காம் பொது
- பி.காம் கணக்கியல் மற்றும் நிதி
- பி.காம் பெருவணிக செயலாளர்
- பி.எஸ்.சி காட்சி ஊடகம்
- கணினி பயன்பாட்டுடன் பி.எஸ்சி கணிதம்
- பி.எஸ்சி கணினி அறிவியல்
- பி.காம் தகவல் அமைப்பு மற்றும் மேலாண்மை
- பி.எஸ்.சி மென்பொருள் பயன்பாடு
முதுகலை படிப்புகள்
- எம்.எஸ்.சி ஐ.டி.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads