ஏ.சி. மிலான்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஏ.சி. மிலான் (A.C. Milan, Associazione Calcio Milan இத்தாலிய ஒலிப்பு: [assotʃatˈtsjoːne ˈkaltʃo ˈmiːlan]) என்பது இத்தாலியைச் சேர்ந்த தொழில்முறை காற்பந்துக் கழகமாகும். 1899-இல் தொடங்கப்பட்ட இக்கழகம் தனது வரலாற்றின் முழுமையையும், 1980-81 மற்றும் 1982-83 பருவங்களைத் தவிர்த்து, இத்தாலியின் முதல்நிலை காற்பந்துக் கூட்டிணைவுத் தொடரில் (1929-30ஆம் பருவத்தில் இருந்து சீரீ ஆ என அறியப்படுகிறது) பங்கேற்று வருகிறது.

விரைவான உண்மைகள் முழுப்பெயர், அடைபெயர்(கள்) ...

இக்கழகமானது இத்தாலியின் மிலன் நகரில் அமைந்துள்ளது. 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளிக்கக்கூடிய சான் சிரோ ஆட்டக்களத்தினை தனது அமைவிடக் களமாகக் கொண்டுள்ளது.[5] சான் சிரோ ஆட்டக்களத்தை, இன்டர் மிலான் அணியுடன் பகிர்ந்துகொண்டு ஆடிவருகின்றனர்; ஏ.சி. மிலான் அணியின் மிகப்பெரும் எதிர் அணியாகக் கருதப்படுவது இன்டர் மிலான் அணியாகும். இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி டெர்பி டெல்லா மடோன்னியா (Derby Della Madonnia) என்றழைக்கப்படுகிறது.[6]

இக்கழகம் 18 அதிகாரபூர்வ யூஈஎஃப்ஏ மற்றும் ஃபிஃபா கோப்பைகளை வென்றுள்ளது. இவ்வகையில் போகா ஜீனியர்ஸ் கால்பந்து அணியுடன் உலக அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது; ரியல் மாட்ரிட் மற்றும் அல் ஆலி கால்பந்துக் கழகங்கள் தலா 20 கோப்பைகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றன.[7][8][9]

Remove ads

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads