ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்

From Wikipedia, the free encyclopedia

ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்
Remove ads

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (Union of European Football Associations, French: Union des Associations Européennes de Football,[3] பரவலான இதன் சுருக்கம் யூஈஎஃப்ஏ ) ஐரோப்பாவில் கால் பந்தாட்டத்திற்கான நிருவாக அமைப்பாகும். 53 தேசிய கால்பந்து சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஐரோப்பாவின் தேசிய கால்பந்து சங்கங்களின் சார்பாக பன்னாட்டு விளையாட்டு அமைப்புகளில் சயல்படுகிறது. தவிர, தேசிய சங்கபோட்டிகளை நடத்துவதையும், பரிசுத்தொகைகள், ஊடக உரிமங்கள் மற்றும் பிற விதிமுறைகளைக் கட்டுப்படுத்துகிறது. யூஏஃபா ஐரோப்பிய சாம்பியன்ஷிப், யூஏஃபா தேசங்களின் லீகு, யூஏஃபா சாம்பியன்சு லீகு, யூஏஃபா யூரோப்பா லீகு, யூஏஃபா யூரோப்பா கான்ஃபரன்சு லீகு, யூஏஃபா சூப்பர் கோப்பை முதலிய போட்டிகளையும் நடத்தி வருகிறது.

விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...

யூஈஃப்ஏ 1954ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் துவங்கியது. எப்பெ சுவார்ட்சு முதல் தலைவராகவும் ஆன்றி டிலௌனய் முதல் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினர். தற்போது தலைவராக முன்னாள் சுலோவேனிய காற்பந்து சங்க தலைவராக இருந்த அலெக்சாந்தெர் செஃபெரின் பணியாற்றுகிறார்.

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads