ஒசே முகிக்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒசே அல்பேர்ட்டோ முகிக்கா கோர்தானோ (José Alberto Mujica Cordano, 20 மே 1935 – 13 மே 2025) உருகுவை அரசியல்வாதியும், உருகுவேயின் முன்னாள் அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் 2005 முதல் 2008 வரை அமைச்சராக இருந்தவர், பின்னர் மேலவை உறுப்பினராக இருந்தார்.
Remove ads
அரசியல் பின்னணி
ஒசே முகிக்கா இளமையிலேயே உருகுவேயின் தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். பின்னர் "டுப்பமாரொசு" என்ற பொதுவுடமைக் கட்சியில் இணைந்து 1960களிலும் 70களிலும் ஆட்சியிலிருந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக கெரில்லா போரில் பங்கு கொண்டார். இவர் பின்னர் 1972 ஆம் ஆண்டில் சிறைப்பிடிக்கப்பட்டார். 1973 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 14 ஆண்டுகள் இராணுவச்சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சூழ்நிலைகளில் அடிக்கடி தடுத்து வைக்கப்பட்ட முகிக்கா கிணற்றுக்கு அடியிலும் இரு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டார்[1]. சிறையில் இருக்கும் போது டுப்பமாரொசின் ஏனைய தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார்.
1985 மக்களாட்சி ஏற்பட்டவுடன், பொது மன்னிப்பின் கீழ் முகிக்கா விடுதலை ஆனார்.
முகிக்கா பின்னர் டுப்பமாரொசின் ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்து புதிய கட்சியொன்றை ஏற்படுத்தி "அகண்ட முன்னணி" என்ற கூட்டமைப்பில் இணைந்தார். 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் இவரது கட்சி பெரும் வெற்றி பெற்றது.
Remove ads
எளிமையான அரசுத்தலைவர்
உலகின் மிக எளிமையான அரசுத் தலைவர் என பெயர் பெற்றிருக்கிறார்.[2] தன்னுடைய வருமானத்தில் 90 விழுக்காட்டை [2] சமூக நலப்பணிகளுக்காக கொடுத்துவிடுகிறார். 2010-ம் ஆண்டு 1800 [2] டாலர் தான் இவரது சொத்து.
இறப்பு
2024 ஏப்ரலில், முகிக்கா தான் உணவுக்குழாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.[3] 2025 சனவரியில், புற்றுநோய் தனது கல்லீரலுக்குப் பரவியுள்ளதாகவும், தான் இறந்து கொண்டிருப்பதாகவும், சிகிச்சையைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும் முகிக்கா அறிவித்தார்.[4] முகிக்கா 2025 மே 13 அன்று, தனது 90வது பிறந்தநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, மான்டிவீடியோவின் புறநகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads