ஓ.யூ.பி. மையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓ.யூ.பி. மையம் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் "ஓவர்சீஸ் யூனியன் வங்கி" மையம் சிங்கப்பூர் நகரில் உள்ள மிக உயரமான மூன்று கட்டிடங்களுள் ஒன்று. ஏனையவை, யூ.ஓ.பி பிளாசா ஒன்று, குடியரசு பிளாசா என்பனவாகும். 280 மீட்டர்கள் உயரமான இக் கட்டிடம், 1986 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டபோது வட அமெரிக்காவுக்கு வெளியில் இருந்த கட்டிடங்களில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமாக இது இருந்தது. சீன வங்கிக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும்வரை இந்தப் பெருமையை இது தக்கவைத்திருந்தது. இக்கட்டிடம் நகரின் மையப்பகுதியில் உள்ள ராபிள்ஸ் இடத்தில் அமைந்துள்ளது.
Remove ads
அமைப்பு
- இக் கட்டிடம் அருகருகே அமைந்த, முக்கோண வடிவான தள வடிவம் கொண்ட இரண்டு கோபுரங்களைக் கொண்டது.
- இதன் உருக்கினாலான சட்டக அமைப்பு இடையே தூண்கள் அற்ற அலுவலகத் தளங்களை உருவாக்க உதவியுள்ளது.
- இதன் தளங்கள், உருக்குத் தகடுகளின் மீது வார்க்கப்பட்ட வலுவூட்டிய காங்கிறீட்டினால் ஆனவை.
- வண்டிகள் தரிப்பிடம், சில்லறை வணிகத்துக்கான இட வசதிகள், சிங்கப்பூரின் மக்கள் போக்குவரத்துத் தொகுதியுடனான இணைப்பு வழிகள் என்பன இக் கட்டிடத்தின் தரை மட்டத்திலும், அதற்குக் கீழும் அமைந்துள்ளன.
- இக் கோபுரங்களின் வெளி மேற்பரப்பு வேதியியல் முறையில் முடிப்புச் செய்யப்பட்ட அலுமீனியக் கலப்புலோகத் தகடுகளால் மூடப்பட்டுள்ளன. இதன்மீது விழுந்து தெறிக்கும் ஒளிக்குத் தக்கவாறு இத் தகடுகளின் நிறமும் மாறுகின்றன.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
- சிங்கப்பூரின் உயரமான கட்டிடங்களின் பட்டியல்
உசாத்துணைகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads