க. இரா. சிறீராம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீதியரசர் க. இரா. சிறீராம் (Kalpathi Rajendran Shriram, பிறப்பு: 28 செப்டம்பர் 1963) இந்திய நீதிபதியும், தமிழ்நாட்டின் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் ஆவார்.[1]
Remove ads
இளமை
சிறீராம், கேரள மாநிலத்தின் கல்பாத்தி இராஜேந்திரன் என்பவருக்கு மகனாக மும்பையில் 28 செப்டம்பர் 1963இல் பிறந்தார். சிறீராம் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகம் மற்றும் இளங்கலைச் சட்டம் பயின்றவர். பின்னர் இலண்டன் மன்னர் கல்லூரியில் கடல்சார் சட்டங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
வழக்கறிஞராக
வழக்கறிஞர் தொழில் செய்வதற்கு, 3 சூலை 1989 அன்று மகாராட்டிரா & கோவா வழக்கறிஞர் சங்கத்தில் தன் பெயரைப் பதிவு செய்தார். பின் மூத்த வழக்கறிஞர் எஸ். வெங்கடேஸ்வரனிடம, இளைய வழக்கறிஞராக சேர்ந்தார். 1997ஆம் ஆண்டு முதல் தனியாக வழக்குரைஞர் தொழில் செய்யத் துவங்கினார். இவர் பன்னாட்டுக் கப்பல் போக்குவரத்து, பன்னாட்டு வணிகச் சட்டங்கள், நிறுவனச் சட்டம், சுங்கச் சட்டம், கடல்சார் காப்பீடு, துறைமுகத்தில் சரக்குகள் ஏற்றுதல்/இறக்குதல் போன்றவைகளில் ஏற்படும் சட்ட சிக்கல்களில் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடுவதில் வல்லவர்.
Remove ads
உயர் நீதிமன்ற நீதிபதியாக
21 சூன் 2013 அன்று இவர் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக கே. ஆர். சிறீராம் நியமிக்கப்பட்டார். 2 மார்ச் 2016 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின், தற்காலிக தலைமை நீதியரசர் ஆர். மகாதேவன் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரை செய்ததால், 11 சூலை 2024 அன்று நீதிபதிகள் தேர்வுக் குழு, நீதியரசர் கே. ஆர். சிறீராமை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது.[2][3][4]. இவர் 27 செப்டம்பர் 2024 அன்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.[5][6]
2025 மே 26 அன்று உச்ச நீதிமன்ற கெலீஜியம் இவரை இராசத்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடம் மாற்ற பரிந்துரைத்தது.[7][8]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads