கங்கா மகால் படித்துறை
வாரணாசியில் அமைந்துள்ள படித்துறை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கங்கா மகால் படித்துறை (Ganga Mahal Ghat) (இந்தி : गंगा महल घाट) வாரணாசியில் கங்கை ஆற்றிலுள்ள முக்கிய படித்துறைகளில் ஒன்றாகும். பொ.ச. 1830 இல் நாராயண வம்சத்தால் கட்டப்பட்ட இந்தப் படித்துறை அசி படித்துறையின் வடக்கே உள்ளது. முதலில் இது அசி படித்துறையின் விரிவாக்கமாக கட்டப்பட்டது.[1] [2] [3] [4]
Remove ads
வரலாறு
நாராயண வம்சம், 1830 இல், வாரணாசியில் கங்கை ஆற்றங்கரையில் ஒரு அரண்மனையைக் கட்டியது. அரண்மனை "கங்கா மகால்" (மகால் என்றால் இந்தியில் அரண்மனை) என்று அழைக்கப்பட்டது. மகால் (அரண்மனை) படித்துறையில் மைந்திருந்ததால், இந்தப் படித்துறைக்கு "கங்கா மகால் படித்துறை" என்று பெயரிடப்பட்டது. அசி படித்துறைக்கும் கங்கா மகால் படித்துறைக்கும் இடையேயான தொடர்ச்சியான இரண்டு கல் படிகள் பிரிக்கின்றன. இந்த அரண்மனையில் ஹேமங் அகர்வாலின் வடிவமைப்பு அரங்கம் அமைந்துள்ளது.[5] அரண்மனையின் மேல் மாடிகளை கார்ல்ஸ்டாட் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த "இந்திய-சுவீடன் ஆய்வு மையம்" பயன்படுத்துகிறது.[1][2][3][4]
Remove ads
அமைவிடம்
இந்தப் படித்துறை கங்கைக் கரையில் அமைந்துள்ளது. இது வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து தென்கிழக்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், அசி படித்துறையிலிருந்து 100 மீட்டர் வடக்கிலும் உள்ளது. [6]
இதையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads