கடற்கரை கைப்பந்தாட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடற்கரை கைப்பந்தாட்டம் (beach volleyball, அல்லது sand volleyball), என்பது இரண்டு அணிகளுக்கிடையே மணற்தரையில் நடைபெறுகின்ற ஒரு குழு விளையாட்டு ஆகும். பொதுவாகக் கடற்கரைகளில் ஓரணிக்கு இரண்டு விளையாட்டு வீரர்கள் வீதம் இரண்டு அணிகளுக்கிடையே இவ்விளையாட்டு விளையாடப்படும். அளவிடப்பட்ட மணல் அரங்கின் குறுக்கே வலை ஒன்று போடப்பட்டிருக்கும். 1996 ஆம் ஆண்டு முதல் இவ்விளையாட்டு ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கப்பட்டு விளையாடப்படுகிறது.
உள்ளக கைப்பந்தாட்ட விளையாட்டுப் போலவே கைப்பந்தை எதிராளியின் ஆடுகளத்தினுள் விழத்தக்கவாறு வலையின் மேலாக செலுத்த வேண்டும். அது போலவே எதிராளி போடும் பந்து தனது ஆடுகளத்தினுள் விழாதவாறு பாதுகாக்க வேண்டும். பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, இந்த அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads