கடலூர் மத்திய சிறைச்சாலை
மத்திய சிறைச்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடலூர் மத்திய சிறைச்சாலை (Cuddalore Central Prison) ஆனது இந்தியாவில், தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மத்திய சிறைச்சாலையாகும். இந்த சிறைச்சாலையானது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மிகவும் பழமையான சிறைச்சாலை ஆகும். இந்த சிறைச்சாலை 1865 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, ஆரம்பத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பகமாகப் பயன்படுத்தப்பட்டது. பின்பு 1986 ஆம் ஆண்டு குற்றவாளிகளின் சிறையாக மாற்றப்பட்டது. செப்டம்பர் 1918 முதல் 14 திசம்பர் 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான சுப்பிரமணிய பாரதி, இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சிறைச்சாலையில் தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என மொத்தம் 723 கைதிகள் இடமளிக்க அனுமதிக்கப்படுகிறது. இங்கு பெண்களுக்கென்றே தனிச் சிறைசாலையும் உள்ளது.[1]
Remove ads
அமைவிடம்
இந்த சிறைச்சாலையானது கடலூர் மாவட்டத்தில் உள்ளது. கடலூரிலிருந்து வெள்ளக்கரை செல்லும் வழியில் கேப்பர் மலை என்னும் ஊரில் உள்ளது. கடலூர் நகரில் இருந்து, இந்த சிறைச்சாலை சுமார் 5 கி. மீ தொலைவில் உள்ளது.
பார்வையாளர்கள் நேரம்
விசாரணைக் கைதிகளை பார்வையிடுவதற்கான நேரம்
இங்குள்ள விசாரணைக் கைதிகளை பார்வையிடுவதற்கு வாரத்தில் மூன்று நாட்கள் அனுமதிக்கப்படுகிறது.
ஆகிய மூன்று நாட்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் இந்த நாட்களில் அரசு விடுமுறை என்றால், அன்று பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்.
தண்டனைக் கைதிகளை பார்வையிடுவதற்கான நேரம்
இங்குள்ள தண்டனைப் பெற்ற கைதிகளை பார்வையிடுவதற்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அனுமதிக்கப்படுகிறது.
ஆகிய இரண்டு நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் இந்த நாட்களில் அரசு விடுமுறை என்றால், அன்று பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
சிறப்பு பார்வை நேரம்
இதைத் தவிர மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மட்டும் குழந்தைகளுக்காக சிறையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
Remove ads
விதிமுறைகள்
இங்குள்ள சிறைவாசிகளைக் பார்க்கச் செல்வோர், அவசியமாக தங்களின் அடையாளச் சான்றுகளான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அவசியமாக எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் சிறைவாசி ஒருவரைக் காண அதிகமாக மூன்று நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சிறைவாசிகளுக்கு பழம், பிஸ்கெட், பிரெட், காரவகைகள் ஆகியவை கொடுக்க அனுமதிக்கப்படுகிறது.
சிறைச்சாலையின் அமைப்பு
தமிழகத்திலுள்ள பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றாக விளங்குகிறது. சிறை வளாகத்தைச் சுற்றிலும் உயர்ந்த கோட்டை மதில்களும், அதன் மேல் இரும்புக்கம்பி வளையங்களும், 24 மணி நேர கண்காணிப்புக் கோபுரங்களும் உள்ளன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads