கனகாம்பரம்

From Wikipedia, the free encyclopedia

கனகாம்பரம்
Remove ads

கனகாம்பரம் (ஒலிப்பு) (தாவரவியல் பெயர் Crossandra infundibuliformis) தென்னிந்தியா மற்றும் இலங்கையை தாயகமாகக் கொண்ட அகாந்தேசியே குடும்பத்தில்[1] உள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இது பெரும்பாலும் தென்னிந்தியா சார்ந்த ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் காணப்படுகிறது. இவை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதை வீடுகளில் அழகுக்காகவும், வணிகத்திற்காகவும் வளர்க்கிறார்கள். இம்மலர்த்தாவரம் தென்னிந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக அதன் மலர்கள் காவி, இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்று கண்ணைக்கவரும் வண்ணங்களில் காட்சித் தருவதேயாகும். இவை ஆண்டுத்தோறும் எக்காலமும் குறிப்பிட்டு வகையராமல் என்றும் பூக்கும் தாவரமாகும். இதை பெண்டுகள் தலையிற் சூடிக்கொள்ளவும், மாலைகளில் பிற மலர்களுடன் சேர்த்துப் பிண்ணவும், வழிபாட்டின் போது பயன்படுத்தியும், பிற அலங்காரப் பொருட்களிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

விரைவான உண்மைகள் கனகாம்பரம், உயிரியல் வகைப்பாடு ...

குளிர் காலத்தில் வாடியும் வதங்கியும் காணப்படுகின்ற வெப்பச் சூழ்நிலைக்கு ஏற்றத் தாவரமாகும். இதை தொட்டிகளில் வளர்க்கும் பழக்கமும் காணப்படுகிறது. இதன் மலர் 3-4 சமச்சீரற்ற இதழ்களைக் கொண்டுக் காணப்படுகிறது. இவைப் புதர்போல் மண்டி கொத்துக்கொத்தாய் பூத்துக் குலுங்கும் தன்மையது.

இவை பெரிதும் அறியப்பட்டது அதுக் கொணரும் மலர்களால் தான். இவை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதை வீடுகளில் அழகுக்காகவும், வணிகத்திற்காகவும் வளர்க்கிறார்கள். இம்மலர்த்தாவரம் தென்னிந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக அதன் மலர்கள் காவி, இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்று கண்ணைக்கவரும் வண்ணங்களில் காட்சித் தருவதேயாகும். இவை ஆண்டுத்தோறும் எக்காலமும் குறிப்பிட்டு வகையராமல் என்றும் பூக்கும் தாவரமாகும். இதை பெண்டுகள் தலையிற் சூடிக்கொள்ளவும், மாலைகளில் பிற மலர்களுடன் சேர்த்துப் பிண்ணவும், வழிபாட்டின் போது பயன்படுத்தியும், பிற அலங்காரப் பொருட்களிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

குளிர் காலத்தில் வாடியும் வதங்கியும் காணப்படுகின்ற வெப்பச் சூழ்நிலைக்கு ஏற்றத் தாவரமாகும். இதை தொட்டிகளில் வளர்க்கும் பழக்கமும் காணப்படுகிறது. இதன் மலர் 3-4 சமச்சீரற்ற இதழ்களைக் கொண்டுக் காணப்படுகிறது. இவைப் புதருப்போல் மண்டி கொத்துக்கொத்தாய் பூத்துக் குலுங்கும் தன்மையது.

இவற்றின் விதைகள் முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறி செடியிலிருந்துக் கீழே விழுகிறது. இது இவ்வாறு பல இடங்களுக்கும் பரவுகிறது.[2]

Thumb
Flower of Crossandra infundibuliformis at Kannur, Kerala
Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads