கபர்தினோ-பல்கரீயா

From Wikipedia, the free encyclopedia

கபர்தினோ-பல்கரீயா
Remove ads

கபர்தினோ-பல்கரீயா என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். வடக்குக் காக்கேசஸ் மலைகளில் அமைந்துள்ள இதன் வடக்குப் பகுதி சமவெளியாக உள்ளது. 12,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த உட்குடியரசில் 2002 ஆண்டுக் கணக்குப்படி 901,494 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 56.6% நகரப் பகுதிகளிலும், 43.4% மக்கள் நாட்டுப் புறங்களிலும் வாழ்கின்றனர். கபர்தினோ-பல்கரீயா, இரண்டு இனங்களின் ஆட்சிப்பகுதிகளாக உள்ளது. ஒன்று, வடமேற்குக் காக்கேசிய மொழி ஒன்றைப் பேசுகின்ற கபர்துகளைப் பெரும்பான்மையாகக் கொண்டது. மற்றப்பகுதி துருக்கிய மொழி பேசுகின்ற பல்கர் இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டது. இவர்களுள் கபர்துகள் 55.3% ஆக உள்ளனர். ரஷ்யர்கள் 25.1% உம், பல்கர்கள் 11.6% உம் உள்ளனர். இவர்களோடு, ஒசெட்டியர்கள், துருக்கியர், உக்ரேனியர், ஆர்மீனியர், கொரியர், செச்சென்கள் ஆகியோரும் குறைந்த அளவில் இக் குடியரசில் வாழ்கின்றனர்.[5][6][7]

விரைவான உண்மைகள் கபர்தினோ-பல்கரீயா, நாடு ...
Thumb
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads