கமல் நரேன் சிங்

From Wikipedia, the free encyclopedia

கமல் நரேன் சிங்
Remove ads

கமல் நரேன் சிங் (Kamal Narain Singh) இந்தியாவின் 22 ஆவது தலைமை நீதிபதி ஆவார். 1926 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சிர்சாவில் உள்ள எல்ஆர்எல்ஏ உயர்நிலைப் பள்ளியிலும் அலகாபாத்தில் உள்ள எவிங் கிறிசுட்டியன் கல்லூரியிலும் கல்வி பயின்றார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பட்டம் பெற்றார். 17 நாட்கள் என்ற குறுகிய காலமே இவர் தலைமை நீதிபதியாக இருந்தார். [1]

விரைவான உண்மைகள் கமல் நரேன் சிங்Kamal Narain Singh, 22 ஆவது இந்திய முதன்மை நீதிபதி ...
Remove ads

சட்ட வாழ்க்கை

ஒரு வழக்கறிஞராக, சிங் 1957 ஆம் ஆண்டு முதல் குடிமையியல் , அரசியலமைப்பு மற்றும் வரிவிதிப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இவரது முதல் நீதித்துறை நியமனம் 1970 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 1972 ஆம் ஆண்டில் நிரந்தர நீதிபதியாகவும் இருந்தது. இவர் 1986 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் சேர்ந்தார். 25 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் 1991 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 12 ஆம் தேதி வரை இந்தியாவின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். அலகாபாத் பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்கத்தால் "பெருமைமிக்க கடந்தகால முன்னாள் மாணவர்" என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. [2] [3]

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று தன்னுடைய 95 ஆவது வயதில் இவர் காலமானார்.

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads