கரீம்நகர் மாநகராட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கரீம்நகர் மாநகராட்சி (க.மா.) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவில் உள்ள கரீம்நகர் நகரை நிர்வகிக்கும் உள்ளூர் ஆளும் அமைப்பாகும். இது 2,60,899 மக்கள்தொகையுடன் தெலங்காணாவில் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.[1] மாநகராட்சி மேயர் மற்றும் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தலைமை தாங்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் கரீம்நகர் மாநகராட்சி, வகை ...
Remove ads

வரலாறு

1941ல் கரீம்நகருக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. பின்னர் இது 5 மார்ச் 2005 அன்று அரசு ஆணை எண்:109 இன் படி கரீம்நகர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[சான்று தேவை]

கரீம்நகர் மாநகராட்சி பரப்பளவில் 50 கிமீ2 பரவியுள்ளது. 2019 இல் சில கிராமங்கள் கரீம்நகர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. க.மா. இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் பரவியுள்ளது. க.மா. ஆனது கரீம்நகர் சட்டமன்றத் தொகுதியின் பெரும்பகுதி மக்களையும், மணகொண்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சிறிய அளவு மக்களையும் உள்ளடக்கியது. க.மா.வின் கோட்டங்கள் கரீம்நகர் சட்டமன்றத் தொகுதியில் 58 கோட்டங்களும், மணகொண்டூரில் 2 கோட்டங்களும் உள்ளது. இன்னும் சில கிராமங்கள் க.மா. உடன் இணைக்க திட்டமிடப்பட்டது ஆனால் பின்னர் அது எதிர்கால திட்டங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. தெலங்காணா உயர் நீதிமன்றம், மாநகரின் புறநகரில் உள்ள மனகொண்டூர், திம்மாபூர், கொத்தப்பள்ளி வரையிலான கிராமங்களை சேர்க்க பரிந்துரைத்துள்ளது, ஆனால் பின்னர் இது கருத்தில் கொள்ளப்படவில்லை.

Remove ads

மக்கள்தொகையியல்

கரீம்நகர் மாநகரம் பரப்பளவில் 50 கிமீ2 பரவியுள்ளது. இது 3,00,000 க்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. தெலங்காணாவின் தேர்தல் ஆணையத்தின்படி, 2020 கரீம்நகர் மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 2,72,692 வாக்காளர்கள் உள்ளனர்.

நிர்வாகம்

கரீம்நகர் மாநகராட்சியில் சராசரியாக 4,550 வாக்காளர்கள் என மொத்தம் 60 கோட்டங்கள் உள்ளன. கரீம்நகர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மற்றும் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் உள்ளது. கரீம்நகர் மாநகராட்சி சாதவாகனர் நகர மேம்பாட்டு முகமையின் ஒரு பகுதியாகும்.

அரசியல்

2014 மாநகராட்சித் தேர்தலில் க.மா. 50 பிரிவுகளுக்கான தேர்தல்களை நடத்தியது. தெலுங்கானா இராட்டிர சமிதி (தெ.இரா.ச.) 24 இடங்களிலும், இ.தே.கா. 14 இடங்களிலும், அ.ம.இ.மு. 2 இடங்களிலும், தெ.தே.க. மற்றும் பா.ஜ.க. தலா ஒரு இடத்திலும், மீதமுள்ள 8 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றன. அ.ம.இ.மு மற்றும் 3 சுயேச்சைகள் ஆதரவுடன் தெ.இரா.ச. மேயர் பதவியை கைப்பற்றியது. மேயராக சர்தார் ரவீந்தர் சிங், துணை மேயராக ஜி.ரமேஷ் தேர்வு செய்யப்பட்டனர்.

2020 மாநகராட்சித் தேர்தலில் க.மா. 60 பிரிவுகளில் 58 க்கு தேர்தல்களை நடத்தியது, ஏனெனில் இரண்டு பிரிவுகளை தெ.இரா.ச. ஒருமனதாக வென்றது. முடிவுகளுக்குப் பிறகு தெ.இரா.ச. 33 இடங்களில் வெற்றி பெற்றது. தெ.இரா.ச. 33 இடங்களிலும், பா.ஜ.க. 13 இடங்களிலும், அ.ம.இ.மு 6 இடங்களிலும், சுயேச்சைகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றனர். பின்னர் 8 சுயேச்சைகள் தெ.இரா.ச. கட்சியில் இணைந்தனர், அ.ம.இ.மு ஆதரவுடன் அவர்களின் மொத்த பலம் 47 ஆக உயர்ந்தது. ஒய்.சுனில் ராவ் மேயராகவும், சல்லா சுவரூபராணி துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]

Remove ads

பெரிய கரீம்நகர் நிலை

கரீம்நகர் ச.உ.வும், மாநில அமைச்சருமான கங்குலா கமலாகர், க.மா.யை பெரிய கரீம்நகர் மாநகராட்சி (ஜி.கே.எம்.சி) ஆக தரம் உயர்த்தி, 50ல் இருந்து 60 ஆக உயர்த்தி மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தார். பிரிவுகள் 60 ஆக அதிகரிக்கப்பட்டன, ஆனால் பெரிய ஐதராபாத்து மற்றும் பெரிய வாரங்கல் கரீம்நகருடன் ஒப்பிடும்போது குறைந்த மக்கள்தொகை காரணமாக க.மா. ஆனது. கரீம்நகரில் இருந்து 2 கி.மீ. ல் உள்ள கொத்தப்பள்ளி பேரூராட்சியை மற்றும் பொம்மக்கல், மல்காபூர், சிந்தகுண்டா, லக்ஷ்மிபூர், மணகொண்டூர், திம்மாபூர், துர்ஷெட் போன்ற கிராமங்களை இணைப்பதன் மூலம் எதிர்காலத்தில் பெரிய கரீம்நகர் உருவாக வாய்ப்பு உள்ளது.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads