கரும்புள்ளிச் செவ்வண்டினம்

கணுக்காலி தொகுயின் குடும்பம் From Wikipedia, the free encyclopedia

கரும்புள்ளிச் செவ்வண்டினம்
Remove ads

கரும்புள்ளிச் செவ்வண்டினம் அல்லது காக்சினெல்லிடே (Coccinellidae) என்பது வண்டுகள் வரிசையினைச் சேர்ந்த கணுக்காலி குடும்பம் ஆகும். இவை சிறிய உருவமுடைய வண்டினங்கள். ஏறத்தாழ 0.8 முதல் 18 மி.மீ வரையிலான அளவுடையவை.[3] இவை பார்ப்பதற்குப் பெரும்பாலும் சிவப்பு, செம்மஞ்சள் அல்லது மஞ்சள் நிறத்தில் அல்லது கருநீலச்சிவப்பு நிறத்தில் காணப்படும். இவ்வண்டுகளின் சிறகில் கரும்புள்ளிகள் காணப்படுகின்றன. இச்சிறுவண்டினத்தின் கால்களும், தலையும், உணர்விழைகளும் கரிய நிறத்தில் இருக்கும். இந்த நிற அமைப்புகள் சில வண்டினங்களில் பலவாறு மாறுபட்டும் காணப்படும். பொதுவாக சிவந்த சிறகில் ஏழு கரும்புள்ளிகள் இருக்கும். ஆனால் பழுப்புநிறத்தில் பன்னிரண்டு வெள்ளைப் புள்ளிகள் உள்ள வகைகளும் உள்ளன. இக்கரும்புள்ளி செவ்வண்டினங்கள் கடலிலும், வட-தென் முனைப்பகுதிகள் தவிர உலகெங்கும் காணப்படுகின்றன. இவ்வினத்தில் ஏறத்தாழ 5,000 சிற்றினங்கள் விளக்கப்பட்டுள்ளன[4]. வட அமெரிக்காவில் மட்டும் 450 சிற்றினங்கள் உள்ளன. இங்கிலாந்தில் 'லேடிபர்டு' (ladybird) என்றும், அமெரிக்காவில் "லேடிபக்கு" (ladybug) அல்லது "லேடிக்கௌ" (ladycow) என்றும் அழைக்கின்றார்கள்.

விரைவான உண்மைகள் கரும்புள்ளிச் செவ்வண்டு, உயிரியல் வகைப்பாடு ...

இந்த வண்டினங்கள் மாந்தரின் தோட்டங்களுக்குப் பயனுடையவை. ஏனெனில் பயிரை அழிக்கும் பூச்சிகளான செடிப்பேன் முதலானவற்றை உண்ணுகின்றன. இப்படியான பூச்சிகள், செடிப்பேன்கள் குழுவில் முட்டைகள் இட்டு, அவை வெளிவரும்பொழுது அவற்றை உண்ணும்.[5]. ஆனால் எப்பிலாக்கினினே (Epilachninae) போன்ற குடும்பத்தைச் சேர்ந்த சில செவ்வண்டின வகைகள் செடிகளின் பகுதிகளையே உண்ணும். ஆகவே இத்தகைய வகைகள் வரவேற்கத்தக்கதாகக் கருதப்படுவதில்லை.

Remove ads

படத்தொகுப்பு

Remove ads

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads