கர்ணாலி மண்டலம்

From Wikipedia, the free encyclopedia

கர்ணாலி மண்டலம்map
Remove ads

கர்ணாலி மண்டலம் (Karnali zone) (நேபாளி: कर्णाली अञ्चलகேட்க) தெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்துள்ள மூன்று மூன்று மண்டலங்களில் ஒன்றாகும். இமயமலையில் அமைந்த கர்ணலி மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் சூம்லா மாவட்டத் தலைமையிட நகரமான சூம்லா ஆகும். இம்மண்டலம் மக்கள் தொகை மிகவும் குறைந்த அளவு கொண்டது.[1]

Thumb
கர்ணாலி மண்டலத்தின் மாவட்டங்கள்

கர்ணாலி மண்டலம் தேசியத் தலைநகரான காட்மாண்டு நகரத்திலிருந்து தொலை தூரத்தில் அமைந்ததும், எளிதில் அடைய இயலாததும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியதாகும். இம்மண்டலத்தின் காளிகோட் மாவட்டம் தவிர பிற மாவட்டத் தலைமையிடங்களில் சிறு வானூர்தி நிலையங்கள் செயல்படுகிறது.

Remove ads

மாவட்டங்கள்

இமயமலைப் பகுதியில் அமைந்த கர்ணாலி மண்டலம் ஐந்து மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள், டோல்பா மாவட்டம், ஹும்லா மாவட்டம், சூம்லா மாவட்டம், காளிகோட் மாவட்டம் மற்றும் முகு மாவட்டம் ஆகும்.

தேசியப் பூங்காக்களும், ஏரிகளும்

நேபாளத்தில் கர்ணாலி மண்டலம் பரப்பளவில் மிகப் பெரியதாகும். இம்மண்டலத்தில் ஷெய் பொக்சுந்தோ தேசியப் பூங்கா மற்றும் ராரா தேசியப் பூங்கா என இரண்டு தேசியப் பூங்காக்கள் கொண்டுள்ளது. பொக்சுந்தா ஏரி நேபாளத்தில் மிகவும் ஆழமான ஏரியாகும். மேலும் 10.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ராரா ஏரி யை நேபாளத்தின் முத்து என அழைக்கப்படுகிறது. இத்தேசியப் பூங்காக்கள் பனிச்சிறுத்தைகள் கொண்டது.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கர்ணாலி மண்டலத்தின் மக்கள் தொகை 3,88,713 ஆகும். [2] திபத்தை ஒட்டியுள்ள இம்மண்டலத்தின் வடக்குப் பகுதியில் திபெத்திய பௌத்தர்களும், தெற்குப் பகுதியில் இந்துக்களும் வாழ்கின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

கர்ணாலி மண்டலம் இமயமலை பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 6,400 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மண்டலத்தின் தட்ப வெப்பம் மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து காலநிலைகளில் காணப்படுகிறது. [3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads