கலிலேயா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலிலேயா ( Galilee; எபிரேயம்: הגליל, [எழுத்துப் பெயர்ப்பு] HaGalil; அரபி: الجليل, [எழுத்துப் பெயர்ப்பு] al-Jalīl) என்பது வட இசுரேல் பகுதியில், அந்நாட்டின் வட மாவட்ட நிர்வாகத்திலும் கைபா மாவட்டத்திலும் அமைந்துள்ள ஒரு பிரதேசமாகும். பாரம்பரியமான மேல் கலிலேயா (எபிரேயம்: גליל עליון Galil Elyon), கீழ் கலிலேயா (எபிரேயம்: גליל תחתון Galil Tahton), மேற்கு கலிலேயா (எபிரேயம்: גליל מערבי Galil Ma'aravi) எனப் பிரிக்கப்பட்டு, வடக்கே "தாண்" முதல் எர்மோன் மலை அடிவாரத்தில், லெபனான் மலையுடன் கார்மேல் மலை, கில்போ மலை தொடர்கள் வரையிலும் ஜெனினின் வடக்கு, டுல்காமின் தெற்கு, யோர்தான் செங்குத்துப் பள்ளத்தாக்கு முதல் ஆக்ரா, ஜெஸ்ரேயல் பள்ளத்தாக்கின் கிழக்கே குறுக்காகவும், நடுநிலக் கடல் கடற்கரை முதல் மேற்கு கடற்கரை வரையிலும் பரந்து காணப்படுகிறது.

Remove ads
புவியியல்
கலிலேயாவின் பல பகுதிகள் 500 முதல் 700 மீ உயரத்தில், பாறைகளைக் கொண்டிருக்கிறது; சில உயர் மலைகளான தாபோர் மலை மெரோன் மலை உட்பட மலைகள், ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பநிலையையும் அதிக மழைவீழ்ச்சியும் கொண்டு காணப்படுகின்றது. இக்காலநிலையின் விளைவாக, தாவரங்களும் காட்டுயிர்களும் இப்பகுதியில் செழித்து வாழ்வதுடன், ஆண்டுதோறும் பல பறவைகள் குளிர் காலநிலை நிமித்தம் ஆபிரிக்காவிற்கு வலசை சென்று, மீண்டும் கூலா-ஜோர்டான் வழியாகத் திரும்புகின்றன. மேல் கலிலேயாவில் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகளுடன், பசுமையுடன், வண்ணமயமான காட்டுப்பூக்களுடனும் பரந்த வெளிகளில் காணப்படுவதுடன், விவிலிய முக்கியத்துவமிக்க பல நகர்களும் காணப்படுவதால் இப்பிரதேசம் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகக் காணப்படுகின்றது.
Remove ads
வரலாறு
பண்டைய வரலாறு

எபிரேய விவிலியத்தின்படி, கலிலேயா இசுரேலியர்களால் பெயரிடப்பட்டு நெப்தலி, தாண் கோத்திரங்களின் பகுதியாகவிருந்ததுடன் ஆசோர் கோத்திரத்தின் நிலப்பகுதியையும் உள்வாங்கிக் காணப்பட்டது.[1] ஆயினும், தாண் கோத்திரம் பரம்பரை உள்ளூர் சட்ட அமலாக்கம், முழு நாட்டுக்குமாக நீதித்துறை தொடர்பில் செயற்பட்டதால் தனிமைப்பட்ட நிலத்தைவிட முழு இனத்திலும் பரவிக் காணப்பட்டது.[2]
Remove ads
மக்கள் தொகையியல்
இப்பிராந்தியத்தில் மிகப் பெரிய நகரங்களாக அக்ரா, நகாரியா, நாசரேத், சபெட், கார்மியல், சகுர், சேபா-அமர், அபுலா, திபேரியா ஆகியன உள்ளன.[3] துறைமுக நகரான கைஃபா இப்பிரதேசம் முழுவதற்குமாக வர்த்தக மையமாகச் செயற்படுகிறது.
சுற்றுலா
கலிலேயா கண்ணுக்கினிய, பொழுதுபோக்கு மிக்க இடமாகவிருப்பதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒரு பிரபலமான இடமாக உள்ளது. புதிய ஏற்பாடு குறிப்பிடுவதன்படி நீர்மேல் நடத்தல், புயலை அடக்குல், ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் ஆகிய பல இயேசுவின் புதுமைகள் இங்கு இடம்பெற்றதால், பல கிறித்தவ யாத்திரிகர்களை இவ்விடம் ஈர்க்கிறது. அத்துடன் விவிலியம் குறிப்பிடும் பல முக்கிய இடங்களான தாபோர் மலை, ஜெஸ்ரியல் பள்ளத்தாக்கு, மெகிடோ போன்றன இங்கு அமைந்துள்ளன.
Remove ads
துணைப் பிரதேசங்கள்
கலிலேயா பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன:
- மேற்கு கலிலேயா மத்தியதரைக்கடலிருந்து பிரிக்கப்பட்டு, வட கைபா முதல் இசுரேல் லெபனான் எல்லை வரை பரந்துள்ளது.
- கீழ் கலிலேயா தெற்கே கார்மேல் மலை, கில்போ மலை முதல் வடக்கே பெயிட் ககரெம் பள்ளத்தாக்கு வரை காணப்படுகிறது. இதன் கிழக்கு எல்லையாக யோர்தான் ஆறு உள்ளது. அது அரபுக் கிராமமாக கானாவையும் உள்ளடக்கியது.
- மேல் கலிலேயா வடக்காக பெயிட் ககரெம் பள்ளத்தாக்கு முதல் தென் லெபனான் வரை பரந்துள்ளது. இதன் கிழக்கு எல்லையாக கூலாப் பள்ளத்தாக்கும் கோலான் குன்றுகளை கலிலேயாக் கடலும் பிரிக்கிறது. மேற்கே மத்தியதரைக்கடல் கடற்கரை வரை செல்கிறது.
- "கலிலேயா கைப்பிடி" (எபிரேயம்: אצבע הגליל, Etzba HaGalil, விளக்கம்: "கலிலேயாவின் விரல்") என்பது கூலாப் பள்ளத்தாக்குப் பிரதேசமாகும்.
Remove ads
படங்கள்


இவற்றையும் பார்க்க
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads