கலைத்திட்டம்

curriculam From Wikipedia, the free encyclopedia

கலைத்திட்டம்
Remove ads

ஒரு கலைத்திட்டம் (அல்லது கலைத்திட்டங்கள் ) கல்விச் செயல்பாட்டில் நிகழும் மாணவர்களின் அனுபவங்களின் முழுமையாக வரையறுக்கப்படுகிறது. [1] [2] இந்த சொல் பெரும்பாலும் திட்டமிடப்பட்ட கற்பித்தல் வரிசையை குறிப்பதாகவோ, அல்லது கல்வியாளர் அல்லது பள்ளியின் கற்றல் கற்பித்தல் நோக்கங்களின் அடிப்படையில் மாணவர்களின் அனுபவங்களைப் பார்க்கிறது. 2003 ஆம் ஆண்டு ஆய்வில், ரெய்ஸ், ரெய்ஸ், லாபன், ஹோலிடே மற்றும் வாஸ்மேன் ஆகியோர் கே -12 பள்ளித் திட்டம் முழுவதும் குறிப்பிட்ட புள்ளிகளில் குறிப்பிட்ட கணித கணித உள்ளடக்கம் மற்றும் செயல்முறை இலக்குகளை கோடிட்டுக் காட்டும் தரங்களாக வெளிப்படுத்தப்பட்ட கற்றல் குறிக்கோள்களின் தொகுப்பே கலைத்திட்டமாகும் என்றனர்.[3] கல்வி நோக்கங்களை அடைவதற்கும், மதிப்பீடு செய்வதற்குமான பாடப்பொருள் உள்ளடக்கம், கற்றல்-கற்பித்தல் பொருட்கள், கற்றல்-கற்பித்தலுக்கான வளங்கள் மற்றும் செயல்முறைகளுடன் மாணவர்களின் திட்டமிட்ட தொடர்புகளை கலைத்திட்டம் உள்ளடக்குகிறது.[4] கலைத்திட்டம் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: வெளிப்படையான, மறைமுகமான (மறைக்கப்பட்டவை உட்பட), கல்வி சார்ந்த கலைத்திட்டம், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் பாடங்களைச் சாரா செயல்பாடுகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.[5] [6] [7]

Thumb
ஒரு மருத்துவப் பள்ளிக்கான 52 வார கலைத்திட்டம், வெவ்வேறு நிலைகளுக்கான படிப்புகளைக் காட்டுகிறது.

கலைத்திட்டங்கள் மிகவும் கடினமாக தரப்படுத்தப்படலாம் அல்லது உயர்நிலை பயிற்றுவிப்பாளர் அல்லது கற்பவர் சுயாட்சியை உள்ளடக்கியிருக்கலாம். [8] பல நாடுகள் தங்கள் நாட்டிற்கா தொடக்கக்கல்வி மற்றும் இடைநிலைக் கல்விக்கான தேசிய கலைத்திட்டங்களைக் கொண்டுள்ளன.

யுனெஸ்கோவின் சர்வதேச கல்வி பணியகம், கலைத்திட்டங்களைப் ஆராய்வதையும், அவற்றை உலகளவில் செயல்படுத்துவதைம் தங்கள் முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளன.

Remove ads

சொற்பிறப்பு

Thumb
1576 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியிடப்பட்ட "கலைத்திட்டம்" என்ற சொல்லின் பயன்பாடு.

"கலைத்திட்டம்" என்ற சொல்லானது இலத்தீன் சொல்லான குர்ரேரே என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். இந்தச் சொல்லுக்கான பொருள் "ஒரு பந்தயத்தின் போக்கு" என்பதாக உள்ளது. குர்ரரே என்பதற்கான மூலச்சொல் "ஓடுவதற்கு", "முன்னேறிச் செல்வதற்கு" என்ற பொளைக் கொண்டுள்ளது.[9] கல்விச் சூழலில் இந்தச் சொல்லின் முதன்முதலில் அறியப்பட்ட பயன்பாடு 1576 ஆம் ஆண்டில் பேராசிரியர் பெட்ரஸ் ராமுஸின்மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்ட பாரிஸ் பல்கலைக்கழகத்தின் படைப்பு புரொபெசியோ ரெஜியாவில் உள்ளது. இந்த சொல் பின்னர் 1582 இல் லைடன் பல்கலைக்கழக பதிவுகளில் காணப்படுகிறது. [10] வார்த்தையானது கல்விக்கு அதிக ஒழுங்கைக் கொண்டுவருவதற்கான கால்வினிச விருப்பத்துடன் நெருக்கமாக இணைந்ததாகத் தெரிகிறது. [10]

பதினேழாம் நூற்றாண்டில், கிளாஸ்கோ பல்கலைக்கழகம் அதன் "படிப்பை" ஒரு "கலைத்திட்டம்" என்றும் குறிப்பிட்டது. இது 1633 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் இந்த வார்த்தையின் முதல் பயன்பாட்டை உருவாக்கியது.[9] பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் வழக்கமாக தங்களின் முழுமையான படிப்பு (அறுவை சிகிச்சையில் பட்டம் போன்றவற்றிற்கு), அவற்றின் உள்ளடக்கம் இரண்டையும் குறிக்கும் சொல்லாக கலைத்திட்டம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தின. 1824 ஆம் ஆண்டு வாக்கில், இந்த வார்த்தை "குறிப்பாக ஒரு கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது பள்ளியால் வழங்கப்படும் ஒரு குறிப்பிட்டப் படிப்பு" என்று வரையறுக்கப்பட்டது. [11]

Remove ads

வரையறைகள் மற்றும் விளக்கங்கள்

தொழில்முறை விளக்கங்கள்

கலைத்திட்டத்திற்கான பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட வரையறை ஏதுமில்லை. [12] சில செல்வாக்குமிக்க வரையறைகள் பல்வேறு கூறுகளை ஒன்றிணைத்து கலைத்திட்டத்தை பின்வருமாறு விவரிக்கின்றன:

  • இசுமித், டூயி,[13] மற்றும் கெல்லி [1] ஆகியோரின் கூற்றுப்படி கலைத்திட்டத்தின் நான்கு வகைகள் பின்வருமாறு வரையறுக்கப்படலாம்:
  • திட்டவட்டமான கலைத்திட்டம்: பள்ளியின் அடையாளம் காணப்பட்ட இலக்கு நிறைவேற கற்பிக்கப்பட இருக்கும் பாடங்கள் மற்றும் பள்ளி வெற்றிகரமான மாணவர்களிடம் எதிர்பார்க்கக்ககூடிய, மாணவர்கள் அடைய வேண்டிய அறிவு மற்றும் திறன்கள்
  • வெளிப்படையாகத் தெரியாத கலைத்திட்டம்: பள்ளியின் கலாச்சாரத்திலிருந்து எழக்கூடிய பாடங்கள் மற்றும் அந்த கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் நடத்தை, மனப்பான்மை, மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிடப்பாத கலைத்திட்டம்
  • மறைந்திருக்கும் கலைத்திட்டம்: திட்டமிடப்பட்டு மற்றும் ஒருங்கமைக்கப்பட்ட பள்ளியின் வேலை நடைபெறும் விதத்தால் மாணவர்கள் கற்றுக்கொள்பவை, (பள்ளியின் பணிகளைத் திட்டமிட்டவர்கள் கூட எதிர்பார்த்திராத மாற்றங்கள்)
  • தவிர்க்கப்பட்ட கலைத்திட்டம்: கலைத்திட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட தலைப்புகள் மற்றும் கண்ணோட்டங்கள்

கெர், கலைத்திட்டம் என்பது பள்ளியால் திட்டமிடப்பட்டதும் மற்றும் வழிகாட்டப்பட்டதுமான, தனிநபர்கள் அல்லது குழுவினரால் வெளிப்படுத்தப்படுகின்ற, பள்ளிக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ நிகழ்த்தப்படுகின்ற அனைத்து வகையான கற்றல் சார்ந்தவையாகும் என்கிறார்.

ஸ்மித்தின் கூற்றுப்படி, ஒரு கலைத்திட்டத்தை பின்வரும் முறையில் ஒரு ஒழுங்கு வரிசையில் வைக்கலாம்.: [14]

படி 1: தேவைகளைக் கண்டறிதல்.
படி 2: குறிக்கோள்களை உருவாக்குதல்.
படி 3: உள்ளடக்கத்தின் தேர்வு.
படி 4: உள்ளடக்கத்தின் அமைப்பு.
படி 5: கற்றல் அனுபவங்களின் தேர்வு.
படி 6: கற்றல் அனுபவங்களின் அமைப்பு.
படி 7: எதை மதிப்பீடு செய்வது மற்றும் அதைச் செய்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளைத் தீர்மானித்தல்.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads