கழலை நசிவுக்காரணி

From Wikipedia, the free encyclopedia

கழலை நசிவுக்காரணி
Remove ads

கழலை நசிவுக்காரணிகள் (Tumor necrosis factors) [அல்லது கழலை நசிவுக்காரணி குடும்பம் (TNF family)] என்பவை உயிரணுக்களின் உயிரிழப்பை (உயிரணு தன்மடிவு; apoptosis) விளைவிக்கக் கூடிய சைட்டோகைன் (உயிரணு தொடர்பி-செயலூக்கி) களின் குழுமத்தைக் குறிக்கும். இக்குடும்பத்தின் முதல் இரண்டு உறுப்பினர்களாகக் கண்டறியப்பட்டவை:

  • கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா (TNFα), இப்பிரிவின் நன்கு அறியப்பட்ட உறுப்பினராகும். ஒற்றைக் குழியத்தால் உருவாக்கப்படுகிற உயிரணு நச்சான கழலை நசிவுக் காரணியானது புற்றுக் கட்டி தேய்வு (tumor regression), நச்சூட்டு அதிர்ச்சி (septic shock), உடல் மெலிவுச் சீர்கேடு (cachexia) ஆகியவற்றில் உள்ளார்ந்தவையாகக் கருதப்படுகிறது[3][4]. இப்புரதமானது முழுமையடைந்த, சுரக்கப்படுகிற சைட்டோகைனில் காணப்படாத அசாதாரண நீளத்துடன், பிறழ்வான சமிக்ஞை வரிசையினைக் கொண்ட முன்-வளரூக்கியாக முதலில் ஆக்கப்படுகிறது[5]. சிறிய நீர்விலக்கும் அமினோ அமிலங்களின் நீட்சியானது கொழுமிய ஈரடுக்குகளில் இந்த முன்-வளரூக்கி நிலைகொள்ள உதவுகிறது[6]. முன்-புரதக்கூறு துணிக்கப்பட்ட பிறகு, முழுமையடைந்த புரதமும், பகுதியாக முறைப்படுத்தப்பட்ட வளரூக்கியும் சுரக்கின்றன[6].
  • நிணநச்சு-ஆல்ஃபா (முன்பு கழலை நசிவுக்காரணி- பீட்டாவாகக் அழைக்கப்பட்டது), இன்டெர்லியூகின் (வெள்ளையணு தொடர்பி-செயலூக்கி)- 10 ஆல் கட்டுப்படுத்தப்படுகிற சைட்டோகைனாகும்[7].
Thumb
சுண்டெலி கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபாவின் முப்படி வடிவம் (1.4 Å நுணுக்கம்). வெவ்வேறு வண்ணங்கள் வெவ்வேறு ஒற்றைப்படிகளைக் குறிகின்றது[1].
விரைவான உண்மைகள் TNF, அடையாளங்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads