கழுவெளி சதுப்பு நிலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கழுவெளி சதுப்பு நிலம், இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் - வானூர் இடையே கழுவெளி சதுப்பு நிலம் உள்ளது. வங்காள விரிகுடாவை ஒட்டி, 15 ஆயிரம் ஏக்கரில், 75 சதுர கிலோ மீட்டர் பரப்பில் கழுவெளி நன்னீர் சதுப்பு நிலம் அமைந்துள்ளது. இதை பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. [1] இந்த சதுப்பு நிலத்தைச் சுற்றி 720 ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள் கழுவெளி சதுப்பு நிலம், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

கழுவெளி சதுப்பு நிலமானது புதுச்சேரியில் இருந்து அனுமந்தை கிராமம் வழியாக சுமார் 40 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்தில் இருந்து முருக்கேரி, நடுக்குப்பம் வழியாக சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஆக்கிரமிப்புகள்

600 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த கழுவெளி சதுப்பு நிலம், இறால் வளர்ப்பு பண்ணியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது 75 சதுர கிலோமீட்டர் அளவிற்கு சுருங்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. [2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads