கவுலூன் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கவுலூன் பூங்கா (Kowloon Park) ஹொங்கொங், கவுலூன் பகுதியில், யவ் சிம் மொங் மாவட்டத்தில், சிம் சா சுயி நகரில் உள்ள ஒரு பூங்காவாகும். இந்தப் பூங்காவை ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுச் சேவைகள் திணைக்களம் பராமரிப்புச் செய்து வருகின்றது. இந்த பூங்காவின் ஒரு பகுதியில் நீச்சல் தடாகம் ஒன்றும் உள்ளது.
Remove ads
வரலாறு
பிரித்தானியர் ஹொங்கொங் தீவை கைப்பற்றியக் காலங்களில், ஹொன்கொங் தீவுக்கும் கவுலூன் தீபகற்ப நிலப்பரப்புக்கும் இடையில் உள்ள கடல் பரப்பு, ஒரு சிறப்பான துறைமுகம் என்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்னர் அந்த கடல் துறைமுகப்பகுதிக்கு விக்டோரியா துறைமுகம் எனப் பெயரிட்டனர். அந்த காலகட்டத்தில் விக்டோரியா துறைமுகத்தை கண்காணிப்பதற்காக, தற்போது கவுலூன் பூங்கா அமைந்திருக்கும் இடத்தில் ஒரு இராணுவ முகாமை நிறுவினர். 1861 ஆம் ஆண்டில் கவுலூன் பகுதியையும் கைப்பற்றிய பிரித்தானியர், இந்த இராணுவ முகாமுக்கு "வில்பர்ட் முகாம்" எனப் பெயரிட்டு நிலைக்கொண்டனர். இந்த "வில்பர்ட் முகாம்" அமைந்திருந்த இடத்திலேயே பின்னரான காலத்தில் கவுலூன் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
1970, யூன் 24 ஆம் நாள், அப்போது ஆளுநராக இருந்த "சேர். டேவிட் டிரன்ச்" என்பவரால் அதிகாரப்பூர்வமாக கவுலூன் பூங்கா பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு இந்த பூங்காவை மேலும் மேம்படுத்தற் பணிகள் நடைபெற்றது. இந்த மேம்படுத்தல் பணிகளுக்கு, அக்காலகட்டத்தில் $300 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன. இந்த செலவை, ஹொங்கொங்கில் குதிரைப் பந்தயங்களை நடாத்தும் நிறுவனமான ஜொக்கி கூடலகம் பொருப்பேற்றது.[1]
Remove ads
மேலதிகத் தகவல்கள்

இந்த பூங்கா 13,3 எக்டேயர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அழகிய வடிவமைப்புகள், நீர்வீழ்ச்சி, நீர்வீச்சி, பறைவயகம் மற்றும் நீச்சல் தடாகம் போன்றனவும் இந்த பூங்காவில் உள்ளன. பூங்காவின் எந்த இடத்தில் எந்த குப்பையையும் காணமுடியாதவாறு மிகவும் தூய்மையாக பூங்கா காணப்படுகின்றது. இந்த பூங்கா மக்கள் நெரிசல் மிக்க நகரமான சிம் சா சுயில் அமைந்திருப்பதாலும், உலகெங்கும் இருந்தும் வந்து கூடும் சுங்கிங் கட்டடம் அருகாமையில் இருப்பதாலும் இந்த பூங்கா எப்போதும் மக்கள் நிறைந்த வண்ணமே இருக்கும். பூங்கா இரவு 12:00 மணிவரை திறந்திருக்கும்.
Remove ads
விடுமுறை நாட்களில்
ஹொங்கொங்கின் விடுமுறை நாட்களிலும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் மக்கள் மிகவும் அதிகரிக்கும் ஒரு இடமாகும். குறிப்பாக வீட்டுப் பணிப்பெண் தொழில் புரிவோர் ஆயிரக்கணக்கில் குவிந்து காணப்படுவர். இலங்கை வீட்டு பணியாளர்களாக தொழில் புரிவோர் கூடும் ஒரு இடமும் இந்த பூங்காவாகும்.
படக்காட்சியகம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads