காசி காலபைரவர் கோயில்
உத்தரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் உள்ள பழமையான சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசி காலபைரவர் கோயில் (Kaal Bhairav Mandir (இந்தி: काल भैरव मंदिर) என்பது வாரனாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும். பரநாத், விஸ்வேஸ்வரகனியில் (வாரணாசி) அமைந்துள்ள இந்த கோவில் இந்து சமயத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக இடமாக; குறிப்பாக உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது. இக்கோயிலானது சிவபெருமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். "கால பைரவரவரைக்" கண்டு மரணம்கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது.
காலபைரவரின் வாகனமாக நாய் உள்ளது. கோவிலின் உட்புறம் உள்ள சன்னதியில வெள்ளி முகம் கொண்ட கால பைரவரின் சிலை உள்ளது. காலவபைரவர் விரிந்த கண்களுடனும், பெரிய மீசையுடனும், முழங்காலளவு நீண்ட கைகளுடனும் காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் அவரது வாகனமான நாய் உள்ளது. கோயிலின் பின்பகுதியில், சேத்ரபால பைரவர் சிலை உள்ளது.[2][3][4]
Remove ads
வரலாறு
இந்த கால பைரவரின் கோயிலைக் கட்டிய காலம் சரியாக தெரியவில்லை ஆனால் பொ.ஊ. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
சமய முக்கியத்துவம்
காலபைரவர் காசியின் காவலராக அதாவது காவல்தெய்வமாக கருதப்படுகிறார். காசியில் வாழவேண்டுமானால் இவரது அனுமதியை பெறவேண்டியது அவசியமாக கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads