காசி விஸ்வநாதர் கோயில் குப்பம்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

காசி விஸ்வநாதர் கோயில் குப்பம் அல்லது கே. வி. கே. குப்பம் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூரில் உள்ள ஒரு மீனவர் கிராமம் ஆகும்.[1] இவ்வூரில் உள்ள மீனவர்கள் 1950களில் தஞ்சாவூர் (தற்பொழுது நாகை) மாவட்டத்தில் இருந்து பிழைப்புக்காக (மீன் பிடி தொழிலுக்காக) இங்கு குடியேறினார்கள்.

விரைவான உண்மைகள் காசி விஸ்வநாதர் கோயில் குப்பம் கே. வி. கே. குப்பம், நாடு ...
Remove ads

பெயரியல்

இங்கு கரும காரியங்களுக்குப் பெயர்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் இருந்தது. இந்த கோயிலால் தான் இவ்வூருக்கு காசி விஸ்வநாதர் கோயில் குப்பம், சுருக்கமாக KVK குப்பம், எனப் பெயர் வந்தது. 1990களில் ஏற்பட்ட புயலின் காரணமாக இக்கோயில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலில் மூழ்கியது.

வரலாறு

இக்குப்பத்தைக் 'குட்டி நாகை மாவட்ட கிராமம்' என்றுகூடச் சொல்லலாம். இங்குள்ளவர்கள் அனைவரும் நாகை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள். இப்பகுதி மக்களின் பேச்சு பழக்க வழக்கங்கள், திருவிழா, திருமணம் போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் நாகை மாவட்டத்தைப் பின்பற்றியே தொடர்கிறது. பெண் கொடுப்பதும், எடுப்பதும் பெரும்பாலும் நாகை மாவட்டத்தில்தான்.

குறிப்பிடத்தக்கோர்

  • முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே. பி. பி. சாமி இந்த மீனவக்குப்பத்துகாரர்.[2][3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads