காசிமேடு
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசிமேடு (Kasimedu) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. சென்னையில் உணவு மீன்கள் விற்பனையாகும் இடங்களில் காசிமேடு பிரபலமானது.[1] குறைந்த விலை மற்றும் விதவிதமான மீன்களின் வரத்து இதற்கான காரணம். ஏலம் விடப்படும் மீன்களை வாங்க, மொத்த வியாபாரிகள், சில்லறை வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் அதிகமாக வந்து செல்லுகின்றனர்.[2] காசிமேடு, சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. ஒருநாளைக்கு சுமார் இருநூறு டன் மீன்கள் காசிமேட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.[3] 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், காசிமேடு பகுதியிலும் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு, கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.[4] சென்னையின் துறைமுகக் கட்டுமானங்கள் விளைவாக, காசிமேடு பகுதியில் கடல் அரிப்புகள் ஏற்படுகின்றன.[5] துறைமுகக் கட்டுமானங்கள் காரணமாக வடக்கு நோக்கி நகரும் நீரோட்டங்கள் தடுக்கப்படுவதால், நீரோட்டங்களின் திசை மாறி, பின் விளைவுகளால், காசிமேடு பகுதியில் சுற்றி கடல் அரிப்புகளை ஏற்படுத்துகின்றன.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 31 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காசிமேடு ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 13°07'30.4"N 80°17'43.8"E (அதாவது, 13.125100°N 80.295500°E) ஆகும்.
காசிமேடு மீன் சந்தை
காசிமேட்டில் மீன் சந்தை ஒன்று உள்ளது. சென்னையின் மீன் சந்தைகளில் காசிமேடு மீன் சந்தை, கூட்டம் அதிகமாகக் காணப்படும் மீன் சந்தை. வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் விதவிதமான மீன்களின் வரத்து அதிகமாக காணப்படுவதுடன், விலை குறைவாகவும் விற்கப்படும்.[6]
காசிமேடு துறைமுகம்
காசிமேட்டில் மீன்பிடித் துறைமுகம் ஒன்று உள்ளது. சர்வதேச தரத்தில் இதை மேம்படுத்த, இந்திய அரசு ரூ.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.[7] காசிமேட்டில், துறைமுகம் சார்ந்த கல்விக்கான அரசு கல்வி நிறுவனமான 'மத்திய மீன்வளத்துறை கடல்சார் - பொறியியல் பயிற்சி நிலையம்' ஒன்று உள்ளது.[8]
அருகிலுள்ள ஊர்கள்
திருவொற்றியூர், ராயபுரம், ஜார்ஜ் டவுன் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகியவை அருகிலுள்ள முக்கியமான ஊர்கள். இங்கிருந்து மட்டுமன்றி, சென்னையின் பிற பகுதிகளில் உள்ள மக்கள், வெளியூர் வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக மீன்கள் கொள்முதல் செய்ய வந்து செல்கின்றனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads