காஜாங் மருத்துவமனை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஜாங் மருத்துவமனை (மலாய்: Hospital Kajang; ஆங்கிலம்: Kajang Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், காஜாங் நகர்ப் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மாவட்ட மருத்துவமனை ஆகும்.
சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தின் மேற்கில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, காஜாங், செமினி, புரோகா பகுதியில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது.
Remove ads
பொது
1889-இல் காஜாங் நகரம் உருவாக்கப்பட்ட போது இந்த மருத்துவமனையும் கட்டப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து வடகிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவில் 16 ஏக்கர் (6.5 எக்டேர்) நிலப்பரப்பில் இருந்த ஓர் இடத்தில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டது.
காஜாங் நகரம் மற்றும் உலு லங்காட் மாவட்டத்தின் வளர்ச்சியுடன் இந்த மருத்துவமனையும் வளர்ச்சி பெற்றது. 1970-களில் 250 படுக்கைகள் இருந்த இந்த மருத்துவமனையில் தற்போது 306 படுக்கைகள் உள்ளன. அத்துடன் இந்த மருத்துவமனையில் 1052 மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.[1]
மறுவடிவமைப்புத் திட்டம்
மருத்துவமனையின் கட்டிடங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது வரை இருக்கும் முதல் நிரந்தரக் கட்டிடம் 1910-இல் கட்டப்பட்டது. 1976-இல் மற்றொரு 4-அடுக்கு தொகுதி சேர்க்கப்பட்டது. பின்னர் சேர்க்கப்பட்ட மற்ற கட்டிடத் தொகுதிகளில் உணவு தயாரிப்பு தொகுதி (1983), பிணவறை (1985) மற்றும் நோயியல் பிரிவு (1992) ஆகியவை அடங்கும்.
1999-ஆம் ஆண்டு மருத்துவமனை மறுவடிவமைப்புத் திட்டத்தின் 2-ஆம் கட்டம் நிறைவடைந்தது. கீழ் சமீபத்திய கட்டிடம் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டது. மறுவடிவமைப்புத் திட்டத்திற்கான RM 14.1 மில்லியன் ரிங்கிட் ஆசிய வளர்ச்சி வங்கியால் வழங்கப்பட்டது.
இரத்தச் சுத்திகரிப்புப் பிரிவு
அந்த மறுவடிவமைப்புத் திட்டத்தின் கட்டுமானம்; 1-ஆம்; 2 ஆம் வகுப்பு நோயாளிக் கூடங்கள் (22 படுக்கைகள் கொண்ட வார்டுகள்), பிறந்த குழந்தை பிரிவு (20 படுக்கைகள்), அறுவை சிகிச்சை அறைகள் (2 அறைகள்), தீவிர சிகிச்சை பிரிவு (6 படுக்கைகள்), குழந்தைகள் பிரிவு (22 படுக்கைகள்) மற்றும் மறுவாழ்வுத் தொகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
2000-ஆம் ஆண்டு இரத்தச் சுத்திகரிப்புப் பிரிவும் தொடங்கப்பட்டது. 13 துறைகள் மற்றும் 12 பிரிவுகள் கொண்ட இந்த மருத்துவமனை 11 நவம்பர் 2005-இல் ஐஎஸ்ஓ 9000 (MS ISO 9001:2000) சான்றிதழ் விருதைப் பெற்றது.[2]
முகவரி
Hospital Kajang Jalan Semenyih
43000 Kajang, Selangor.
Tel : +6(03)8736 3333
Faks : +6(03)8736 7527
இணையத் தளம்: hkjg
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads