காஞ்சனா 3

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

காஞ்சனா 3
Remove ads

காஞ்சனா 3 என்பது ராகவா லாரன்ஸ் என்ற இயக்குநரால் இயக்கப்பட்டு வரும் ஒரு தமிழ் திகில் பழிவாங்கும் வகைத் திரைப்படம். இதில் ராகவா லாரன்ஸ்உதவி நடன இயக்குநர் தயாபரன், ஓவியா நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. முனி தொடரின் நாலாவது பாகமாகவும், காஞ்சனா தொடரின் மூன்றாவது பாகமாகவும் தயாராகிறது. இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் வெளியிடப்பட்டது.

விரைவான உண்மைகள் இயக்கம், தயாரிப்பு ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

காஞ்சனா 2 (2015) வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற, திகில் நகைச்சுவைப் படங்களை அதிகமாக தயாரிக்கப்போவதாக, இயக்குநர் ராகவா லாரன்ஸ் கூறினார். ஆகஸ்டுல், நாகா எனும் திரைப்படத்தை அறிவித்தார். அவரே இயக்குகிறார் என்றும், முனி தொடரின் நான்கவாது பாகமாக இருக்கும் என்றும் அறிவித்தார். முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அணுகினார். என்றாலும், அதில் அதிக முன்னேற்றம் இல்லாததால், தனது அடுத்த படங்களான மொட்ட சிவா கெட்ட சிவா(2017), சிவலிங்கா(2017) ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

ஆகஸ்ட் 2017 ல் இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்குவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அவரது வழக்கமான துணை நடிகர்களான, உதவி நடன இயக்குநர் தயாரிப்பாளர் தயாபரன் கோவை சரளா, ஸ்ரீமன் மற்றும் தேவதர்னி ஆகியோர் இதிலும் உள்ளனர்.[1][2] 2010ல் புகழ்பெற்ற திரைப்படமான எந்திரனைத் தயாரித்த சன் பிக்சர்ஸ், தங்கள் இரண்டாவது படமாக இதைத் தயாரிக்கின்றனர்.[3] செப்டம்பர் இறுதியில், ஓவியா, முதன்மைப் பாத்திரங்களில் நடிப்பதற்காக தேர்வுசெய்யப்பட்டனர்.

படப்பிடிப்பு சென்னையில் அக்டோபர் 2017 முதல் வாரத்தில் படம் தொடங்கியது. நிவேதா ஜோசப் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிகிறார்.[4]

Remove ads

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads