காட்மியம் ஆக்சைடு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காட்மியம் ஆக்சைடு (Cadmium oxide) என்பது CdO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற காட்மியம் சேர்மங்களை தயாரிப்பதற்கு உதவும் மிக முக்கியமான முன்னோடிச் சேர்மமாக இது கருதப்படுகிறது. எண்முக நேர்மின் அயனி மற்றும் எதிர்மின் அயனி மையங்களைக் கொண்ட சோடியம் குளோரைடு போல கனசதுர பாறை உப்புப் பின்னல் வடிவத்தில் காட்மியம் ஆக்சைடு படிகமாகிறது[10]. அரியவகை கனிமம் மோண்டெபொனைட்டு வடிவத்தில் இச்சேர்மம் இயற்கையில் தோன்றுகிறது[11]. மேலும் காட்மியம் ஆக்சைடை நிறமில்லா படிக உருவமற்ற தூளாக அல்லது பழுப்பு அல்லது சிவப்பு நிற படிகங்கங்களாக காணமுடியும்[12]. அறைவெப்பநிலையில் (298 கெல்வின்) காட்மியம் ஆக்சைடு 2.18 எலக்ட்ரான் வோல்ட் பட்டை இடைவெளி மதிப்பு கொண்ட ஒரு என்–வகை குறைக்கடத்தியாகும்[13].
Remove ads
தயாரிப்பும் கட்டமைப்பும்
காட்மியம் சேர்மங்கள் பெரும்பாலும் துத்தநாக தாதுக்களுடன் சேர்ந்தே காணப்படுவதால் துத்தநாகம் சுத்திகரிப்பு செயல்முறையின் போது காட்மியம் ஆக்சைடு பொதுவான ஒரு உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது. தனிமநிலை காட்மியத்தை காற்றில் எரிப்பதன் மூலம் இதை தயாரிக்கலாம். நைட்ரேட்டு அல்லது கார்பனேட்டு போன்ற பிற காட்மியம் சேர்மங்களை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம். தூய்மையான நிலையில் இது சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. எதிர்மின் அயனி வெற்றிடங்கள் காரணமாகத் தோன்றும் குறைபாடுடைய கட்டமைப்புகள் காரணமாக காட்மியம் ஆக்சைடு வழக்கத்திற்கு மாறான பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது[14]. காட்மியம் ஆவியை காற்றுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் வர்த்தக முறை காட்மியம் ஆக்சைடு உருவாக்கப்படுகிறது[15] Cadmium oxide is prepared commercially by oxidizing cadmium vapor in air.[16].
Remove ads
பயன்
காட்மியமுலாம் பூச , தேக்க மின்கலங்களுக்கான மின்முனை, காட்மியம் உப்புகள், வினையூக்கி, பீங்கான் மெருகூட்டி, ஒளிரும் பொருள் மற்றும் உருளைப்புழு கொல்லி எனப் பல்வேறாக காட்மியம் ஆக்சைடு பயன்படுகிறது. மின்முலாம் பூசுதலும், நிறமிகளில் ஒரு மூலப்பொருளாக இருப்பதுவுமே காட்மியம் ஆக்சைடுக்கான முக்கிய பயன்பாடாகும்[17].
ஒளிபுகும் மின்கடத்தி
காட்மியம் ஆக்சைடு ஓர் ஒளிபுகு மின்கடத்தும் பொருளாகும்[18]. ஓர் ஒளிபுகு மின்கடத்தும் படச்சுருளாக 1907 ஆம் ஆண்டு காரல் பேதெக்கெர் என்பவரால் தயாரிக்கப்பட்டது[19]. ஒளி இருமுனையங்கள், ஒளிமின்னழுத்திகள், ஒளிமின்னழுத்த கலன்கள், ஒளிபுகு மின்முனைகள், நீர்மப்படிக காட்சியமைப்புகள், அகச்சிகப்புக் கதிராய்விகள் மற்றும் பிரதிபலிப்பு எதிர்ப்புப் பூச்சுகள் போன்ற பயன்பாடுகளில் மெல்லிய படங்களின் வடிவத்தில் காட்மியம் ஆக்சைடு பயன்படுத்தப்பட்டுள்ளது. புற ஊதாக்கதிர் ஒளியில் வெளிப்படும்போது CdO நுண் துகள்கள் ஆற்றல் இடைவெளி கிளர்ச்சிக்கு உட்படுகின்றன. பீனால் ஒளித்தரங்குறைப்பு வினைகளில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது[20]
காட்மிய முலாம்
பெரும்பாலான வணிக காட்மிய முலாம் பூசல் சயனைடு குளியல் முறையில் மின்படிதல் செயல்முறையின் மூலம் மேற் கொள்ளப்படுகிறது. காட்மியம் சயனைடு, சோடியம் ஐதராக்சைடிலிருந்து கிடைக்கும் காட்மியம் ஆக்சைடும் நீரிலுள்ள சோடியம் சயனைடும் இத்தகைய சயனைடு குளியல் செயல்முறைக்கு உதவுகின்றன. 32கிராம்/லிட்டர் காட்மியம் ஆக்சைடுக்கு 75 கிராம்/லிட்டர் சோடியம் ஐதராக்சைடு என்ற விகிதம் இச்செயல்முறைக்கு மிக உகந்த்தாகும். காட்மியத்தின் செரிவு 50% அளவு வரை வேறுபடலாம். பொதுவாக ஒளியூட்டிகள் இக்குளியல் வினையில் சேர்க்கப்பட்டு மீத்தூய காட்மியம் மின்முனைகளை பயன்படுத்தி அறை வெப்பநிலையில் செயல்முறை நிகழ்த்தப்படுகிறது[21].
Remove ads
வினைத்திறன்
காட்மியம் ஆக்சைடு ஒரு கார ஆக்சைடு என்பதால் நீரிய அமிலங்களால் தாக்கப்படுகின்றன. [Cd(H2O)6]2+. வகை கரைசல்கள் உருவாகின்றன. வலிமையான காரக்கரைசல்களுடன் சேர்த்து சூடுபடுத்தும்போது [Cd(OH)4]2− அயனி உருவாகிறது. அறைவெப்ப நிலையில் சுற்றுப்புற ஈரப்பதத்தில் இருந்து நீரை எடுத்துக் கொள்ளும் காட்மியத்தின் மேற்பரப்பு ஒரு மெல்லிய படலமாகக் காட்மியம் ஆக்சைடை உருவாக்குகிறது[11]. மேலும் அறைவெப்பநிலையில் காட்மியம் ஆக்சிசனேற்றம் அடைந்து காட்மியம் ஆக்சைடாக மாறுகிறது[21]. காட்மியம் ஆவியும் நீராவியும் சேர்ந்தும் கூட காட்மியம் ஆக்சைடு உருவாகிறது. மீள் வினையில் ஐதரசன் வாயு உருவாகிறது[21].
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads