காத்தாடி ராமமூர்த்தி

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காத்தாடி ராமமூர்த்தி (பிறப்பு: 1938) என்று அழைக்கப்படும் சுந்தரேசன் ராமமூர்த்தி ஒரு இந்திய நடிகரும், இயக்குநரும், எழுத்தாளரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்களில் நகைச்சுவை நடிகராக நடித்ததற்காக அறியப்பட்டவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் எஸ்.சுந்தரேச அய்யரின் மகனாகப் பிறந்தார். கும்பகோணம் பாணாதுரை பள்ளியில் படித்தவர்.[2] இவர் 1958இல் விவேகானந்தா கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் பயிலும் நாட்களிலேயே ராமமூர்த்தி நாடகங்களில் நடிப்பதைப் பெரிதும் விரும்பினார். அவரது நாடகங்கள் மக்களிடையே மிகப் பிரசித்தமானவை. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, தேவனின் ‘கோமதியின் காதலன்’ என்ற நாடகத்தில் வில்லனின் கைத்தடி பக்கிரி வேடமேற்று நடித்தார். 1960-களில் ‘இஃப் ஐ கெட் இட்’ என்று சோ போட்ட நாடகத்தில் இவர் ‘காத்தாடி’ என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ‘காத்தாடி’ என்ற அடைமொழியைப் பெற்றார்.[2]

Remove ads

பன்முகம்

இவர் தமிழில் மேடை நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

நடிப்பு

நகைச்சுவை நடிகராக இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவையாகும். இவர் மேடை நாடகங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார். இவரது நாடக குழுவில் நடிக்க முதல் வாய்ப்பைப் பெற்று பின்னர் பிரபலமடைந்தவர்களுள் சோ.ராமசாமி, விசு, டெல்லி கணேஷ் மற்றும் கிரேசி மோகன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். பொம்மலாட்டம், மடிப்பாக்கம் மாதவன், சின்ன பாப்பா பெரிய பாப்பா (கெளரவ வேடம்), துப்பறியும் சாம்பு (துப்பறியும் சாம்புவாக), ஆஹா, இளவரசி உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும், ஒரு ஓடை நதியாகிறது (1983) உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 40 நாடகங்களை 7,000 தடவை மேடையேற்றிய பெருமையைப் பெற்றவர்.[2]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads