காலிமுகத் திடல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காலிமுகத் திடல் (Galle Face Green) என்பது இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பில் காலி வீதிக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே காணப்படும் திறந்தவெளி கரையோர முகத்திடல் ஆகும். இது பிரித்தானிய ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்டு என்பவரின் முயற்சியின் பலனாக 1859 ஆம் ஆண்டு உருவானது. இருப்பினும் அசல் காலி முகத்திடலானது இன்று காணப்படுவதை விட மிகப் பெரிய பரப்பளவில் விரிவானதாக இருந்தது. காலிமுகத் திடல் ஆரம்பத்தில் முக்கியமாக குதிரைப் பந்தயத்திற்கும், குழிப்பந்தாட்ட அரங்காகவும் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் துடுப்பாட்டம், கால்பந்து, டென்னிஸ், ரக்பி ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்பட்டது.[1][2][3]
Remove ads
வெளி இணைப்புகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads