காவிரி தொடருந்து நிலையம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

காவிரி தொடருந்து நிலையம்
Remove ads

காவிரி தொடருந்து நிலையம் என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது காவிரி தொடருந்து நிலையம் அல்லது காவேரி தொடருந்து நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. காவிரி ஆற்றுக்கு அருகாமையில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது அதன் குறியீடு:CV மூலம் அதிகாரப்பூர்வமாக அறியப்படுகிறது.

விரைவான உண்மைகள் காவிரி, பொது தகவல்கள் ...

இது சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் பிரிவில் ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் சங்கரிதுர்க்கம் தொடருந்து நிலையம் (மற்றும் சேலம் சந்திப்பு) இடையே அமைந்துள்ளது. இது ஈரோடு நகருக்கு அருகில், ஈரோட்டில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இது சேலம் தொடருந்து கோட்டத்தில் சென்னை-திருவனந்தபுரத்தின் பரபரப்பான பிரிவில் அமைந்துள்ளது. காவேரி தொடருந்து நிலையம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே இயக்கப்படுகிறது. இந்த நிலையம் ஈரோடு சந்திப்பிற்கான ஷட்டில் ஸ்டேஷனாக பயன்படுத்தப்படுகிறது.

ஈரோடு சந்திப்பு மற்றும் சேலம் சந்திப்பு இடையே இயக்கப்படும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் இங்கு நிறுத்தப்படும்.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads