சேலம் தொடருந்து கோட்டம்

From Wikipedia, the free encyclopedia

சேலம் தொடருந்து கோட்டம்
Remove ads

சேலம் ரயில்வே கோட்டமானது இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் ஒரு தொடருந்து கோட்டம் ஆகும். இது 2006ல் பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களை உள்ளடக்கியது. 795 கி.மீ. (494 மைல்) நீளம் கொண்டது. கோயம்புத்தூர் சந்திப்பு இந்த பிரிவின் மிகப்பிரசித்தமான தொடருந்து நிலையமாகும். கோட்டத்தில் வருவாயில் இந்த சந்திப்பு 45% பங்கு வகிக்கிறது. ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, திருப்பூர் சந்திப்பு, வட கோயம்புத்தூர் சந்திப்பு, போத்தனூர் சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல் சந்திப்பு, இருகூர் சந்திப்பு, ஓமலூர் சந்திப்பு ஆகியவை இதில் அடங்கும். ஈரோடு லோகோ ஷெட் WDM-2, WDM-3A, WDM-3D, WDG-3A, WDG-4, WAG-7 மற்றும் WAP-4 லோகோசுகள் ஆகியவையாகும்.[1]

விரைவான உண்மைகள் கண்ணோட்டம், தலைமையகம் ...
Remove ads

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இரட்டைப் பாதை

  • 02 ஜனவரி 2024 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, 41.4கி.மீ நீளமுள்ள சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் இடையேயுள்ள பாதையானது 448கோடி மதிப்பினில் இரட்டைப் பாதையாக மாற்றப்பட்டது.[2][3][4]


அமிர்த பாரத் நிலைய மேம்பாட்டு திட்டங்கள்

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[5][6][7][8][9]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் பின்வரும் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை வடக்கு, நாமக்கல், மேட்டுப்பாளையம், குன்னூர், உதகமண்டலம், போத்தனூர், சின்ன சேலம், மொரப்பூர், சாமல்பட்டி, திருப்பத்தூர்.[10][11][12][13][14][15][16]

Remove ads

மேலும் பார்க்க


மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads