கிந்தாமணி

இந்தோனேசியா, பாலி, தீவில் ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கிந்தாமணிmap
Remove ads

கிந்தாமணி (ஆங்கிலம்; இந்தோனேசியம்: Kintamani) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு மாவட்டம் (Kecamatan); மற்றும் அந்த மாவட்டத்திற்குள் ஒரு கிராமமும் ஆகும். இந்த இடம் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாப் பகுதியாகும்.[2][3]

விரைவான உண்மைகள் கிந்தாமணி Kintamani ᬓᬶᬢᬫᬦᬶ, நாடு ...

கிந்தாமணி நகரம் பத்தூர் மலையின் (Mount Batur) மேற்கு விளிம்பில் உள்ளது. பத்தூர் மலை பகுதியைப் பார்ப்பதற்கான நிறுத்த இடமாகவும் உள்ளது.

புரா துலுக் பியூவின் (Pura Tuluk Biyu) 1,000 ஆண்டுகள் பழைமையான "அமைதி சடங்குகள்" எனும் கல் பலகைகளுக்காகவும் (Rites of Peace Stone Tablets); கிந்தாமணி நாய் எனும் ஓர் அரிய வகை நாய்களுக்காகவும் அறியப்படுகிறது.[4][5]

கிந்தாமணியில் பாலி ஆகா எனும் பூர்வீக பாலினிய மக்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.

Remove ads

கிந்தாமணி மாவட்டம்

கிந்தாமணி மாவட்டம் தென்பசார் நகரத்தை விட 366.9 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளது, மேலும் இது 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 112,463 மக்களைக் கொண்டிருந்தது.[6] கிந்தாமணி மாவட்டம் கிராமப்புறமானது; மொத்தம் 48 கிராமங்கள் உள்ளன.

அத்துடன் இந்த மாவட்டம் 19 பாலி ஆகா பூர்வீக மக்களின் கிராமங்களையும் கொண்டுள்ளது. அந்தக் கிராமங்கள், பத்தூர் மலையின் அடிவாரத்திலும், பத்தூர் ஏரியிலும், கிந்தாமணி பள்ளத்தாக்கிலும் பரவியுள்ளன.[7]

Remove ads

இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள்

இந்தோனேசியாவின் நிர்வாகப் பிரிவுகள்; நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[8]

Remove ads

காட்சியகம்

  • கிந்தாமணி காட்சிப் படங்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads