கிரியான் மாவட்டம்

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கிரியான் மாவட்டம்map
Remove ads

கிரியான் (மலாய்: Daerah Kerian); (ஆங்கிலம்: Kerian District) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். பேராக் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியை உள்ளடக்கியது. இதன் வடக்கே பினாங்கு; கெடா மாநிலங்கள் உள்ளன. முக்கிய நகரம் பாரிட் புந்தார்.

விரைவான உண்மைகள் பேராக், தொகுதி ...

பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்குத் தென்கிழக்கில் 37 கி.மீ (23 மைல்) தொலைவில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது.[1]

கிரியான் மாவட்டம் பினாங்கு மாநிலத்திற்கு மிக அருகாமையில் இருக்கிறது. அதனால் மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான பினாங்கின் ஒரு பகுதியாகவே இந்த மாவட்டம் கருதப் படுகிறது. பேராக் மாநிலத்தில் மிகுதியாக நெல் பயிராகும் இடங்களில்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

1850-ஆம் ஆண்டுகளில் இந்த மாவட்டத்தின் சுற்றுப் பகுதிகளில் காபி; கரும்பு தோட்டங்கள் திறக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். தீபகற்ப மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் மாவட்டங்களில் கிரியான் மாவட்டமும் ஒன்றாகும். பாகன் செராய் நகரத்தில் இந்தியர்கள் கிராமம் (Kampung India) எனும் பெயரில் ஒரு கிராமமே உள்ளது.[2]

Remove ads

நிர்வாகப் பிரிவுகள்

Thumb
கிரியான் மாவட்ட வரைப்படம்

கிரியான் மாவட்டம் 8 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. அவையாவன:

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்

பின்வரும் புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. [1]

மேலதிகத் தகவல்கள் கிரியான் மாவட்டத்தில் உள்ள இனக்குழுக்கள்: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு, இனம் ...
Remove ads

மலேசிய நாடாளுமன்றம்

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கிரியான் தொகுதிகளின் பட்டியல். நாடாளுமன்றத்தின் மக்களவை, டேவான் ராக்யாட் என்று அழைக்கப் படுகிறது. கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. நாடாளுமன்றக் கூட்டங்கள் அங்கு நடைபெறுகின்றன.

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், தொகுதி ...

பேராக் மாநிலச் சட்டமன்றம்

பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் கிரியான் மாவட்டப் பிரதிநிதிகள்:

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், மாநிலம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads