கிருஷ்ண பலராமர் கோயில்
உத்திரப் பிரதேசத்தில் உள்ள கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிருஷ்ண பலராமர் கோயில் (Sri Krishna Balaram Mandir, also called ISKCON Vrindavan), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் அமைந்த மூன்று கோயில்களின் தொகுதி ஆகும்.[1] இக்கோயில் வளாகத்தை இஸ்கான் பக்தி இயக்கத்தினர் 1977-ஆம் ஆண்டில் நிறுவினர். இக்கோயில் வளாகத்தில் ராதை-கிருஷ்ணருக்கு இராதா சியாம்சுந்தர் எனும் பெயரில் ஒரு கோயிலும், கிருஷ்ணர்-பலராமர் பெயரில் ஒரு கோயிலும் மற்றும் சைதன்யர்-நித்தியானந்தர் கோயிலும் உள்ளது.


இக்கோயில் நடுவில் கிருஷ்ணர் மற்றும் பலராமன் மூலவர்களாக உள்ளனர். வலப்புறத்தில் இராதா கிருஷ்ணன் இராதா சியாம்சுந்தர் எனும் பெயரில் கோபியர்களுடன் ஒரு தனிக்கோயில் உள்ளது. இடது புறத்தில் சைதன்யர், நித்தியானந்தர் மற்றும் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா ஆகியோர்களுக்கு கோயில் உள்ளது.[2]இக்கோயிலின் நுழைவாயில் அருகேசைதன்யர் மற்றும் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா ஆகியோர்களின் சமாதி மண்டபம் உள்ளது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads