குஜராத் அறிவியல் நகரம், அகமதாபாத்

அகமதாபாத்தில் உள்ள அறிவியல் மையம் From Wikipedia, the free encyclopedia

குஜராத் அறிவியல் நகரம், அகமதாபாத்
Remove ads

குஜராத் அறிவியல் நகரம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதன் தலைநகரான அகமதாபாத்தில் ஹெபட்பூரில் உள்ள அமைந்துள்ள , அறிவியலில் கல்வியை நோக்கி அதிகமான மாணவர்களை ஈர்க்கும் முயற்சியாக குஜராத் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த மையத்தில் ஒரு ஐமாக்ஸ் 3 டி தியேட்டர், ஒரு எரிசக்தி பூங்கா, அறிவியல் மண்டபம், பூமிக்கிரகம், ஒரு ஆம்பிதியேட்டர், லைஃப் சயின்ஸ் பார்க் மற்றும் நடன நீரூற்றுகள் உள்ளன.   அறிவியல் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த மையம் தங்கும் வசதியினை செய்து தருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, உயிரிய தொடர்பாக பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க நிதிகளின் உதவியுடன் அறிவியல் நகரத்தால் "பள்ளி குழந்தைகளுக்கான உயிரியளவுகள் குறித்த விடுமுறை பயிற்சி திட்டம்" என்ற திட்டம் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.சி தேர்வு நிறைவு செய்த மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு மாணவர் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு இது ஒரு மாத கால திட்டமாக அமையும்.[1]

விரைவான உண்மைகள்
Thumb
பூமி குவிமாடம்
Thumb
அறிவியல் நகரத்தில் டைனோசர் மாதிரி
Thumb
அறிவியல் நகரத்தில் அறிவியல் பரிசோதனை (மின்சார அரங்கம்)
Thumb
எலக்ட்ரோடோம் அறை
Remove ads

பூமிக் காட்சிக்கூடம்

2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, அறிவியல் நகரம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பூமிக் காட்சிக்கூடம் எனப்படும் எர்த் பெவிலியனை திறக்கக் காத்திருக்கிறது. இது 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பூமி வடிவ குவிமாடமாகும். இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளும்போது சந்திக்கும் நேரடி அனுபவங்களை வெளிப்படுத்துவதே இதன் குறிக்கோளாக அமையும். இந்த அரங்கத்தில் ஒவ்வொரு கண்டத்தைப் பற்றியும் விவரங்கள் காணப்படும். பார்வையாளர்களை நேரடியாக களத்தில் இறங்கி பங்களிக்க இதுஅனுமதிக்கும்.[2]

Remove ads

சிறப்புகள்

இங்குள்ள சிறப்புகளில் குறிப்பிடத்தக்கனவாக ஐமாக்ஸ் 3டி திரைப்பட அரங்கம், அறிவியல் கூடம், கணினி உலகில் உருவகம், நடமாடும் இசை நீரூற்று போன்றவற்றின் செயல்பாடுகள் காண்போரை பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.[3]

ஐமாக்ஸ் 3டி திரைப்பட அரங்கம்

இங்கு ஒரு ஐமாக்ஸ் 3டி திரைப்பட அரங்கம் உள்ளது. 10 மாடிக் கட்டட அளவிற்கு அது பெரியதாகும். 3டி திரைப்படங்கள் டால்பி ஒலியுடன் இந்த அரங்குகளில் திரையிடப்படுகின்றன. இதனைப் பார்ப்பதற்கு முன்கூட்டியே பதிவு செய்துகொள்வது அவசியம் ஆகும். எந்தெந்த நேரங்களில் திரைப்படங்களில் இந்த 3டி அரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்ற விவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

அறிவியல் கூடம்

இங்குள்ள மற்றொரு சிறப்பு அறிவியல் கூடம் எனப்படுகின்ற கூடம் ஆகும். இந்த அறிவியல் கூடம் ஒரு வகையில் புகழ்க் கூடமாகக் கருதப்படுகிறது. அறிவியல் உலகில் காணப்படுகின்ற அனைத்தின் மாதிரிகளையும் இங்கு காண முடியும். அது பார்வையாளர்களின் மனதில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு மனித குலத்தின் எதிர்காலத்தை ஏதோ ஒரு வழியில் மாற்றத்தக்க வகையில் திறன் கொண்டு அமைந்ததாகும். இந்தக் கூடத்தில் உள்ள காட்சிப் பொருள்களை அங்கு வரும் பார்வையாளர்கள் தொட்டுப் பார்க்கலாம். அவ்வாறு தொடும்போது அவர்கள் அந்த மாதிரியின் தன்மையை உணர்ந்துகொள்கின்றனர். அதன் பின்னால் உள்ள அறிவியல் கூறுகளை அவர்கள் படித்துக்கொள்வதற்கும், புரிந்துகொள்வதற்கும் இது வாய்ப்பாக அமைந்துள்ளது.

Remove ads

கணினி உலகில் உருவகம்

இது கணினிக் காலம் ஆகும். இக் காலத்தில் கணினி அடிப்படையிலான இலக்கு அதிக அளவிற்கு முன்னேறியுள்ளதை அறிய முடியும். கிட்டத்தட்ட உண்மை நிலையை எடுத்து முன்வைக்கும் அளவிற்கு அது அமைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக ஆராயும்போது அதனை உருவகம் என்று கொள்ளலாம். இந்த அறிவியல் உலகமானது இவ்வாறான பல உருவகங்களை அளிக்கிறது. அறிவியல் களத்திலிருந்து உருவக நோக்கில் அமைய சிமுலேட்டர் ரைட் எனப்படுகின்ற உருவகப் பயணங்கள் உதவுகின்றன. அவற்றில் ரோலர் காஸ்டர் தொடங்கி ஜுராசிக் பார்க் வரை பல நிலையில் பயணிக்க வாய்ப்புள்ளது. இங்குள்ள கேளிக்கை தருகின்ற சுற்றுக்களில் இதுவும் ஒன்றாகும். பொதுவாக இம்மாதிரியான பயணங்கள் 20 நிமிடங்கள் நடத்தப்படுகின்றன. இத்தகு பயணத்தில் கலந்துகொள்ள விழைவோர் முன்கூட்டி அனுமதிச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.

நடமாடும் இசை நீரூற்று

சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்ற முக்கியமாக அம்சமாக அறிவியல் நகரத்தில் உள்ளது நடமாடும் இசை நீரூற்று ஆகும். மனித நடத்தையின் அடிப்படையிலான நடனத்தை மாதிரியாகக் கொண்டுவரும் வகையில் அது திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த இயக்கத்திற்கு மிக சிறப்பான முறையில் இசை, ஒளி, மற்றும் பிறவற்றைத் தெரிவு செய்துள்ளார்கள். அதன் விளைவாக அக் கூறுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படும்போது மிகத் தெளிவாக அங்குள்ள நீரூற்று நடனமாடுவதைப் போலக் காட்சிக்குத் தெரிகிறது. இசைக்கேற்றபடியான நடனம் ரசிக்கும்படியாக உள்ளது. அப்போது ஒளியுடன் வெளிப்படும் புகை போன்ற தோற்றம் பிரமிக்கவைக்கிறது. அதனருகே பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி அமைப்புகள் அதனை இயற்கையாக, நம்பவைக்கக் கூடிய வகையில் செயல்படுகின்றன. பெரும்பாலும் அனைத்து நாள்களிலும் மாலைப் பொழுதுகளில் இந்த நடமாடும் இசை நீரூற்று இயக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவிலான தொகையைச் செலுத்தி பார்வையாளர்கள் இதனை கண்டுகளிக்கலாம்.

Remove ads

மேலும் காண்க

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads