குடிவாடா அமர்நாத்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
குடிவாடா அமர்நாத் (Gudivada Amarnath)(பிறப்பு 1985/1986)[1] என்பவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் சார்பில்ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு 2019-ல் நடைபெற்ற தேர்தலில் அனகாபல்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுசட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
குடிவாடா அமர்நாத், முன்னாள் அரசியல்வாதியும், அனகப்பல்லி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான குடிவாடா குருநாத ராவ் மற்றும் நாகமணி ஆகியோரின் மகனாவார்.[1][4] இவர் பொறியியல் பட்டதாரி ஆவார்.[5]
தொழில்
குடிவாடா அமர்நாத் மற்றும் அவரது தாயார் நாகமணி ஆகியோர் இந்தியத் தேசிய காங்கிரசில் உறுப்பினர்களாக இருந்தனர். தந்தையின் மறைவுக்குப் பிறகு காங்கிரசிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தனர். மார்ச் 2014-ல், இவர்கள் இருவரும் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியில் சேர்ந்தனர்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads