குந்தி மாவட்டம்

சார்க்கண்டில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

குந்தி மாவட்டம்map
Remove ads

குந்தி மாவட்டம் (Khunti district) (Hindi: खूंटी जिला) கிழக்கு இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின், சோட்டாநாக்பூர் கோட்டத்தில் அமைந்த, ஜார்கண்ட் மாநிலத்தின் இருபத்து நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...

இம்மாவட்டம் ராஞ்சி மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து 12 செப்டம்பர் 2007-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்டது. குந்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குந்தி நகரத்தில் செயல்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தின் இருபத்து நான்கு மாவட்டங்களில், மக்கள்தொகை குறைந்த மாவட்டங்களில் லோஹர்தக்கா மாவட்டத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

பட்டியல் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் இம்மாவட்டத்தின் பல பகுதிகள் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தில் உள்ளது.[1]

Remove ads

மாவட்ட நிர்வாகம்

2,535 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட் குந்தி மாவட்டம் அர்க்கி, குந்தி, முர்கு, ராணியா, டோர்பா மற்றும் கர்ரா என ஆறு வட்டார வளர்ச்சி அலுவலகங்களை கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,31,885 ஆக உள்ளது. அதில் 2,66,335 ஆண்கள் மற்றும் 2,65,550 பெண்கள் ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 9,97 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 210 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 63.86% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 74.08% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 53.69% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 86,292 ஆக உள்ளது.[2]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 1,38,863 (26.11 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 13,122 (2.47 %)ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 136,438 (25.65 %) ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 1,708 ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 2,41,292 (45.37%) உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads