குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம் (Guru Gobind Singh Indraprastha University) முன்னர் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைநகரான தில்லியில், துவாரகா நகரில் அமைந்துள்ளது. இது தில்லியின் மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். சட்டம், மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி, தொழில்முனைவோர், அறிவியல், வணிகம் உள்ளிட்ட துறைகளில் பதினான்கு பல்கலைக்கழக பள்ளிகளும் மூன்று ஆய்வு மையங்களையும் கொண்டு செயல்படுகிறது.[2][3]

விரைவான உண்மைகள் முந்தைய பெயர்கள், குறிக்கோளுரை ...
Remove ads

வரலாறு

குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம் இந்திரபிரசுதா பல்கலைக்கழகமாக 28 மார்ச் 1998 அன்று தில்லி அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழக சட்டம், 1998-இன் விதிகளின் கீழ் 1999ஆம் ஆண்டில் திருத்தத்துடன் தேசிய தலைநகர் தில்லி அரசாங்கம் இதனை ஒரு மாநில பல்கலைக்கழகமாக அங்கீகரித்தது.[4] பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்தின் பிரிவு 12பி இன் கீழ் இப்பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[5] மகாபாரத காவியத்தில் முக்கியமாக இடம்பெற்றுள்ள பண்டைய நகரமான இந்திரபிரசுதத்தின் பெயரால் இந்தப் பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது.[6] 2001ஆம் ஆண்டில், பத்தாவது சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் நினைவாக பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது.

Remove ads

அமைப்பும் நிர்வாகமும்

பல்கலைக்கழகத்தில் 14 பல்கலைக்கழக பள்ளிகள் உள்ளன (பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள்). இவற்றில் 12 துவாரகா வளாகத்தில் உள்ளன.[7] பல்கலைக்கழகத்திற்குள் பேரிடர் மேலாண்மை ஆய்வு, மருந்து அறிவியல், மனித மதிப்புகள், நெறிமுறைகள், தொழில்நுடப் பெருக்கம், வணிகமயமாக்கல் உள்ளிட்ட ஆராய்ச்சிக்காக 4 மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் மூன்று துவாரகா வளாகத்தில் உள்ளன. ஒன்று கிழக்கு தில்லி வளாகத்தில் உள்ளது.

பல்கலைக்கழகப் பள்ளிகள்

குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகத்தில் 14 பல்கலைக்கழக பள்ளிகள் உள்ளன (இவற்றில் 12 கல்லூரிகள் துவாரகா பிரதான வளாகத்தில் உள்ளன.[8] இவை:

  • கட்டிடக்கலை, திட்டமிடல் பள்ளி
  • தானியக்கம், ரோபாட்டிக்சு பள்ளி
  • அடிப்படை, பயன்பாட்டு அறிவியல் பள்ளி
  • உயிரித் தொழில்நுட்பப் பள்ளி
  • வேதியியல் தொழில்நுட்பப் பள்ளி
  • வடிவமைப்பு, கண்டுபிடிப்பு பள்ளி
  • சுற்றுச்சூழல் மேலாண்மை பள்ளி
  • மனிதநேயம், சமூக அறிவியல் பள்ளி
  • தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பப் பள்ளி
  • சட்டம், சட்ட ஆய்வுகள் பள்ளி
  • மேலாண்மை ஆய்வுகள் பள்ளி
  • மக்கள் தகவல்தொடர்பு பள்ளி
  • மருத்தும், துணை மருத்துவ சுகாதார அறிவியல் பள்ளி

இணைவுக் கல்லூரிகள்

 பல்கலைக்கழகத்தின் விதிகள், ஒழுங்குமுறைகளின்படி 120க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன.[9]

Remove ads

கல்வி

உலக தரவரிசை

க்யு எசு தரவரிசையில் 2025-இல் இப்பல்கலைக்கழகம் 1001-1200 தரவரிசையில் உள்ளது.[10]

தரவரிசை

2024ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால் இந்திய பல்கலைக்கழகங்களில் இந்த பல்கலைக்கழகம் 74ஆவது இடத்திலும், ஒட்டுமொத்த பிரிவில் 101-150 தரப் பிரிவிலும் இருந்தது.[11] மேலும் பொறியியல் தரவரிசையில் பல்கலைக்கழக பொறியியல், தொழில்நுட்ப பள்ளி 89ஆவது இடத்திலும்[12], மேலாண்மை தரவரிசைகளில் பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வுகள் பள்ளி 65ஆவது இடத்திலும் இருந்தது.[13]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads