குறிஞ்சாங்குளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குறிஞ்சாங்குளம் அல்லது குறிஞ்சாக்குளம், தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குருஞ்சாக்குளம் ஊராட்சியில் அமைந்துள்ளது. இந்த கிராமம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1,425 ஆகும். இவர்களில் பெண்கள் 750 பேரும் ஆண்கள் 675 பேரும் உள்ளனர்.
Remove ads
குறிஞ்சாங்குளம் படுகொலை
குறிஞ்சான்குளத்தில், நாயக்கர் சமூகத்தினரின் மண்டபத்திற்கு எதிரே, பறையர் சமூகத்தினர் தங்கள் பகுதியில் வழிபடுவதற்காக காந்தாரியம்மன் சிலை வைத்து வழிபடுவதற்கு[1] முனைந்தார்கள் என்ற காரணத்திற்காக 16 மார்ச் 1992 அன்று, பறையர் சமூகத்தைச் சேர்ந்த சர்க்கரை, சுப்பையா, அம்பிகாபதி மற்றும் அன்பு என்ற நான்கு இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் கொலை வழக்கிலிருந்து விடுவித்து 2001 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குறிஞ்சாங்குளம் எனும் பெயரில் குறும்படம் தயாரித்து, தமிழர் திரைக்களம் எனும் பெயரில் இணையத்தில் வெளியிட்டமைக்காக ஐவரை, 22 செப்டம்பர் 2016 அன்று காவல்துறை கைது செய்யப்பட்டனர்.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads