குழ. கதிரேசன்
சிறார் பாடநூல் ஆசிரியர், எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குழ.கதிரேசன் (பிறப்பு: அக்டோபர் 17, 1949) என்பவர் குழந்தைகளுக்கான கதை, கவிதை எழுதியவர். கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர். சிறார் இலக்கியப் படைப்பாளி, சிறார் பாட நூல்கள் ஆசிரியர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.[1]
இளமைப் பருவம்
இவரின் பெற்றோர் சு. கதி. குழந்தையன் - செல்லம்மை ஆவர். இவர் அக்டோபர் மாதம் பதினேழாம் நாள் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் ஊர் இராயவரம். இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
இலக்கியப் பணி
குழ. கதிரேசன் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளார். ஒலிப்பேழைகள் பல தயாரித்து மழலையர்களுக்கென வழங்கியுள்ளார்.[2]
நூல்கள்
- எலி கடித்த பூனை
- பேசும் கிளியே
- கூட்டாஞ்சோறு
- மழலையர் தமிழ்
- மழலைப் பூக்கள்
- சிரிக்கும் மழலை
- பூச்செண்டு
- பாடுவோம் அறிவியல்
- பாட்டுத்தோட்டம்
விருதுகள்
தமிழ் மொழியில் 2016–ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது பெற எழுத்தாளர் குழ.கதிரேசன் தேர்வாகினார். ஒட்டுமொத்த குழந்தைகள் இலக்கிய பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3] [4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads