குழித்துறை (கேரளம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குழித்துறை (Kuzhithura) என்பது இந்தியாவில், கேரளாவின், கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்த சிற்றூராகும். இது அரபிக்கடலுக்கும் திருவனந்தபுரம்-சோரனூர் கால்வாய்க்கும் இடையில் மணல் அள்ளப்பட்ட குறுகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது பசுமையான நிலம், உப்பங்கழிகள் மற்றும் கடற்கரைகள் கொண்ட ஒரு சுற்றுலாத் தலமாகும். இது கருநாகப்பள்ளி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக உள்ள ஆலப்பேடு ஊராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.
இந்தச் சிற்றூரிற்கான போக்குவரத்து பாலங்களின் வழியாகவும், நாட்டுப் படகுகள் மூலமாகவே அமைந்துள்ளது. கருநாகப்பள்ளி, காயம்குளம், ஒச்சீரா ஆகியவை இக்கிராமத்திற்கு மிக அருகாமையில் உள்ள முக்கிய இடங்கள். இவ்விடங்களுக்கு சாலைவழியாக பயணிக்கலாம். ஆலப்புழா, கொல்லம் இடங்களுக்கு படகு வழிப்பயணமாக செல்லலாம். அமிர்தானந்தமயியின் அம்ரித்த விஷ்வா வித்யாபீடம் இவ்வூரிலிருந்து 1கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.[1] பசுமையான நிலப்பரப்பும், நான்குபுறம் நீரால், அழகியகடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுலாத் தலம் போல் மக்கள் இங்கு வருகின்றனர்.
Remove ads
ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயில்

ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயில் (குழித்துறை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.) கேரளாவில் உள்ள பழமையான கிருஷ்ணன் கோயில்களில் ஒன்று. இது டி எஸ் கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் இக் கோவில் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவின்போது மக்கள் திரளாக வருகின்றனர்.
கல்வி நிறுவனங்கள்

சென்றடையும் வழிகள்
சாலை வழி
கருநாகப்பள்ளியிலிருந்து 8 கி. மீ தொலைவில், ஒச்சீராவிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.
இரயில் வழி
அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்: கருநாகப்பள்ளி, காயம்குளம்
வான்வழி
அருகிலுள்ள சர்வதேச விமான நிலையங்கள்:
- திருவனந்தபுரம் - 97 கி. மீ.
- கொச்சி - 145 கி.மீ.
அமைவிடம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
