கே. ஆர். சேதுராமன்

சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது பெற்றவர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கே. ஆர். சேதுராமன் ஓமியோபதி மருத்துவர். (குட்டின்) கே. கே. இராமாச்சாரி-கிருட்டிணாமணி அம்மாள் தம்பதியருக்கு 1939ல் மதுரையில் பிறந்தவர். இவர் நூலகர், சிறந்த சமூக வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். சௌராட்டிர மொழி வளர்ச்சிக்காக 2006இல் சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது பெற்றவர்.

கல்வி

நூற்றாண்டு விழா கொண்டாடிய மதுரை சௌராட்டிர உயர்நிலைப் பள்ளியில் 1956ல் பள்ளி இறுதி படிப்பு முடித்தவர். தமிழ் உணர்வை ஊட்டி வளர்க்கும் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரையில் இளங்கலை விலங்கியல் கல்வியை 1960ல் முடித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., முதுகலை பட்டம் பெற்று, சென்னைப் பலகலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை நூலக அறிவியல் பட்டம் பெற்றார்.

பணி புரிந்த இடங்கள்

  1. சென்னைப் பல்கலைகழக விரிவாக்க மைய நூலகம், மதுரை,
  2. செயின்ட் ஜான் கல்லூரி நூலகம், பாளையங் கோட்டை
  3. சௌராட்டிர கல்லூரியில் நிறுவன நூலகர்,மதுரை
  4. சென்னைப் பல்கலைகழக விரிவாக்க மைய நூலகம், கோவை
  5. கோவை பாரதியார் பல்கலைக்கழக நூலகம்.

படைத்த நூல்கள்

  1. ”சேதுராமன் மும்மொழி சௌராட்டிர அகராதி”.
  2. ”தமிழ்நாட்டில் சௌராட்டிரர்:முழு வரலாறு” நூல்.
  3. ”ஸ்ரீதியாகராச வேங்கடரமண சரித்திரம்”.
  4. ”சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்” எனும் நூல்.
  5. ”ஸ்ரீமன்நடனகோபால நாயகி சுவாமிகள்” என்ற வரலாற்று நூல்.
  6. ”வராக விடுதலை” எனும் சிறுகதை.

சாகித்திய அகாதமி விருது

இந்தியாவில் சிறுபான்மை இனமக்கள் பேசும் மொழிவளர்ச்சிக்காக வழங்கப்படும், பாஷா சம்மான் விருதை கே. ஆர். சேதுராமனுக்கும், தாடா. சுப்பிரமணியனுக்கும் கூட்டாக, 2006-இல் சௌராட்டிர மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டதைப் பாராட்டி சாகித்திய அகாதமி வழங்கிப் பாராட்டியுள்ளது.[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரநூல்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads