கே. சி. ஜி. தொழில்நுட்பக் கல்லூரி

சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கே. சி. ஜி. தொழில்நுட்பக் கல்லூரி (KCG College of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இதன் நிறுவனர்-தலைவர் கே. சி. ஜி. வர்கீசு ஆவார். "ஒவ்வொரு மனிதனையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்; எந்த மனிதனையும் தோல்வியடையச் செய்யக்கூடாது" என்ற நோக்கத்தை நிறைவேற்ற 1998ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரி நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

வரலாறு

கே. சி. ஜி. தொழில்நுட்பக் கல்லூரி 1998இல் நிறுவப்பட்டது. இது ஒரு கிறிஸ்தவ சிறுபான்மை கல்வி நிறுவனமாகும். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. மேலும் புது தில்லியின் ஏஐசிடிஇ-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி ஐ. எஸ். ஓ. 9001: 2000 சான்றிதழ் பெற்றுள்ளதுது.[1]

வளாகம்

இந்தக் கல்லூரியானது, பழைய மகாபலிபுரம் சாலையில் (ஐ. டி. நெடுஞ்சாலை) அடையாரிலிருந்து (தெற்கு சென்னை) சுமார் 8 கி.மீ. தொலைவில் காரப்பாக்கத்தில் அமைந்துள்ளது.

படிப்புகள்

இளநிலைப் படிப்புகள்

  • பி. இ. ஊர்திப் பொறியியல்
  • பி. இ. வானூர்திப் பொறியியல்
  • குடிசார் பொறியியல்
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • பி. இ. மின்னணுவியல் மற்றும் கருவிப் பொறியியல்
  • மின் மற்றும் மின்னணுப் பொறியியல்
  • பி. இ. மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல்
  • பி. இ. இயந்திரப் பொறியியல்
  • பி. டெக். தகவல் தொழில்நுட்பம்
  • பி. டெக். ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம்.

முதுநிலைப் படிப்புகள்

  • எம். இ. தொடர்பியல் அமைப்பு
  • எம். இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம். இ. உற்பத்தி வடிவமைப்பு
  • எம். இ. மின்னணு ஆற்றல் மற்றும் செயலி.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

  • வினீத் ஸ்ரீனிவாசன், பாடகர், நடிகர், மலையாளத் திரைப்பட இயக்குநர்.
  • அஜு வர்கீஸ், மலையாளத் திரைப்பட நடிகர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads