கொரட்டூர் தொடருந்து நிலையம்
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொரட்டூர் தொடருந்து நிலையம் (Korattur Railway Station) சென்னை-அரக்கோணம் புறநகர் தொடருந்து வழிப்பாதையில் அமைந்துள்ள ஓர் தொடருந்து நிலையம் ஆகும். சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் இந்நிலையம் உள்ளது. கொரட்டூர், கொளத்துர் மற்றும் பாடி மாதனாங்குப்பம் ஆகிய இடங்களுக்கும் இந்நிலையம் பயன்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 12.85 மீ. உயரத்தில் சென்னையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு

இந்நிலையத்தின் முதல் வழித்தடம், 1979 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் பிரிவில் மின்சாரமயமாக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி வில்லிவாக்கம்-ஆவடி மின்வாரியத்தின் மின்முனையுடன் இந்த நிலையத்தின் கூடுதல் இணைப்புகள் மின்சாரமயமாக்கப்பட்டன.[2]
தளவமைப்பு
இந்த நிலையத்தில் புறநகர் தொடருந்துகளுக்கான இரண்டு நடைமேடைகள் உள்ளன. சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையேயான மேற்கு தொடருந்துப் பாதையில் சராசரியாக 260 பயணங்கள் நிகழ்கிறது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தத் தொடருந்து நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 43,000 க்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.[3] அம்பத்தூர் தொழிற்துறை வளாகத் தொழிலாளர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கொரட்டூர் நிலையம் முதன்மையாகப் பயன்படுகிறது. [4]
தொடருந்து நிலையத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு இறுதிவடிவம் பெற்றிருக்கின்றது. ₹ 112,5 மில்லியன் செலவினால் திட்டமிட்டு வருகிறது.[5]
Remove ads
இதையும் காண்க
- சென்னை புறநகர் ரயில்வே
- சென்னை ரயில் நிலையங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
