கொல்லம் கோவில் விழாத் தீவிபத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய மாநிலம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பரவூரில் அமைந்துள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் ஏப்ரல் 10, 2016 அன்று கிட்டத்தட்ட 03:30 மணிக்கு,[a] வாணவெடி கொண்டாட்டங்களின்போது வெடி மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, 111 நபர்கள் கொல்லப்பட்டனர்;[1] 350க்கும் கூடுதலானவர்கள் காயமுற்றனர்.[2] உள்ளூர் தகவல்களின்படியும்[3] கண்ணால் கண்டவர் சாட்சிகளின்படியும்,[2] இந்த வெடிவிபத்தும் தீ விபத்தும் [2]கொண்டாட்டங்களின் அங்கமாக நடந்த வாணவேடிக்கைப் போட்டிக்காக காங்கிறீட்டு கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளின் மீது தீப்பொறிகள் விழுந்ததால் நிகழ்ந்தது.[2][3][4] இந்த வாணவேடிக்கைப் போட்டியை நடத்துவதற்கான அரசு அனுமதியை கோவில் நிர்வாகத்தினர் பெற்றிருக்கவில்லை.[5] இந்த விழாவின்போது ஏறத்தாழ 15,000 இந்து பக்தர்கள் வந்திருந்தனர். ஏழுநாட்கள் கொண்டாடப்பட்ட திருவிழாவின் கடைசி நாளாக இது இருந்தது.[6]
இந்தக் கோவிலை ஈழவர் சமூக தனியார் அறக்கட்டளை நிர்வகித்து வந்தது.[7]
Remove ads
குறிப்புகள்
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads