கோட்டா பிராமணர்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்டா பிராமணர்கள் (Kota Brahmins) என்பவர்கள் முக்கியமாக இந்திய மாநிலமான கருநாடகாவைச் சேர்ந்த ஒரு இந்து பிராமணத் துணைச் சாதியாகும். இவர்கள் தங்கள் பெயரை தங்கள் சொந்த கிராமமான கோட்டாவிலிருந்து பெறுகிறார்கள். இவர்கள் மற்ற பிராந்திய பேச்சுவழக்குகளிலிருந்து வேறுபட்ட கன்னடதைப் பேசுகிறார்கள். இவர்கள் முக்கியமாக உடுப்பி மாவட்டத்தின் கோட்டா கிராமங்களில் குவிந்துள்ளனர். இவர்கள் ஸ்மார்த்தப் பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர். நரசிம்மர், சாலிகிராமம் அவர்களுக்கு முக்கியமானதாகும்.
இவர்கள் கர்நாடகவின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், மங்களூர், பந்த்வால் மற்றும் தெற்கு கன்னட மாவட்டத்தின் புத்தூர் வட்டம் போன்ற பகுதிகளில் பரவியிருக்கின்றனர். முதலில் வட இந்தியாவிலிருந்து கோட்டா (உடுப்பி தாலுகா) மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு வந்ததாகக் கருதப்படுகிறார்கள்.
Remove ads
மேலும் காண்க
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads