கோதாவரீஷ் மிஸ்ரா
சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒடிய எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டிட் கோதாவரீஷ் மிஸ்ரா (Pandit Godabarish Mishra, (1886 - 1956) இந்திய ஒடிசாவின் புகழ்பெற்ற சமூக சேவகரும், கவிஞரும், மற்றும் இலக்கிய மேதையுமான இவர், அரசியல்வாதி, பதிப்பாசிரியர், கட்டுரையாளர், மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவராக அறியப்படுகிறார்.[1]
Remove ads
பிறப்பு
இந்திய கிழக்கு மாநிலமான ஒடிசாவின் பூரி மாவட்ட பானாபூர் பகுதியிலுள்ள சிறீனிவாஸ்பூர் சாசன் என்ற இடத்தில், 1886 ஆம் ஆண்டு, "லிங்கராஜ் மிஸ்ரா", மற்றும் "அப்சரா தேவி" தம்பதியர்க்குப் பிறந்த கோதாவரீஷ், சிறுவயது முதலே இலக்கிய ஆர்வமும், தேசப் பக்தியும் கொண்டிருந்தார்.[2]
படிப்பு
கோதாவரீஷ் மிஸ்ரா, தொடக்கக்கல்வியைத் தனது சொந்த ஊரிலும், மேனிலைப் பள்ளிக்கல்வியை புரியிலும் பயின்றவர், கட்டக் ரவென்ஷா கல்லூரியில் (Ravenshaw College) பி. ஏ. மெய்யியல் இளநிலைப் பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பொருளியல் முதுநிலைப் பட்டம் பெற்றார். இங்கிலாந்து, மற்றும் அமெரிக்கா போன்ற நாடிகளில் உயர்கல்விக் கற்கும் வாய்ப்புகள் தேடிவந்த இவருக்கு, பிரித்தானிய அரசு, இவருக்கு துணை மாவட்டாட்சியர் பணியை வழங்க அழைப்பு விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.[3]
Remove ads
சான்றாதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads