கோபால்ட்(II) ஐதராக்சைடு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோபால்ட்(II) ஐதராக்சைடு (Cobalt(II) hydroxide) என்பது Co(OH)2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை கோபால்ட்டசு ஐதராக்சைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். ரோசா சிவப்பு நிறத் தூளாக இது காணப்படுகிறது. α-Co(OH)2, என்ற வாய்ப்பாட்டுடன் கூடிய நீல நிற நிலைப்புத்தன்மையற்ற வடிவமும் அறியப்படுகிறது [3]. மிளிரிகள், மைகள், சாயங்களில் உலர்த்தும் முகவராக கோபால்ட்(II) ஐதராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. பிற கோபால்ட் சேர்மங்கள் தயாரித்தலிலும், மின்கல அடுக்கு மின்முனைகளை பேரளவில் தயாரிக்கும்போது ஒரு வினையூக்கியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
Remove ads
தயரிப்பும் வினைகளும்
கார உலோக ஐதராக்சைடுடன் நீரிய Co2+ உப்புக் கரைசலைச் சேர்க்கும்போது கோபால்ட்(II) ஐதராக்சைடு திண்மமாக வீழ்படிவாகிறது :[4]
- Co2+ + 2 NaOH → Co(OH)2 + 2 Na+.
கோபால்ட்(II) ஐதராக்சைடு 168 ° செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சூடுபடுத்தும்போது கோபால்ட்(II) ஆக்சைடாக சிதைவடைகிறது. காற்றில் ஆக்சிசனேற்றமும் அடைகிறது. 300 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சிதைவடையும்போது Co3O4 உருவாகிறது [5][6]. இரும்பு(II) ஐதராக்சைடு போலவே கோபால்ட்(II) ஐதராக்சைடும் ஓர் அடிப்படை ஐதராக்சைடாகும். இது அமில நீரிய கரைசல்களில் [Co(H2O)6]2+ என்ற அணைவுச் சேர்மமாக உருவாகிறது. வலிமையான காரங்களில் கூடுதல் ஐதராக்சைடு அயனிகளைக் ஏற்றுக் கொண்டு [Co(OH)4]2− மற்றும் [Co(OH)6]4−போன்ற அடர் நீல கோபால்டேட்டு(II) அணைவுகளாக உருவாகிறது.
Remove ads
கட்டமைப்பு
புருசைட்டு படிகக் கட்டமைப்பில் கோபால்ட்(II) ஐதராக்சைடு படிகமாகிறது. இதன்படி, எதிர்மின் அயனிகளும், நேர்மின் அயனிகளும் காட்மியம் அயோடைடில் உள்ளது போல பொதிந்துள்ளன. அதில் காட்மியம் எண்முக மூலக்கூற்று வடிவியலை ஏற்றுள்ளது [7]. முன்னதாகக் கூறப்பட்ட α-Co(OH)2 சேர்மம் β-Co(OH)2 சேர்மத்துடன் கிட்டத்தட்ட நெருங்கிய தொடர்பைக் கொண்டது ஆகும். ஆனால் இது ஐதரோடால்சைடு கட்டமைப்பை ஏற்கிறது. இக்கட்டமைப்பின்படி எதிர்மின் அயனிகள் உள்ளடுக்குகளில் காணப்படுகின்றன. எனவே இதை ஒரு பல்லுறுத் தோற்றமாக கருதமுடியாது. β-Co(OH)2 சேர்மத்திற்கு α-Co(OH)2 சேர்மம் ஒரு முன்னோடிச் சேர்மம் எனலாம் [8]

.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads