கோலா குபு பாரு மருத்துவமனை

From Wikipedia, the free encyclopedia

கோலா குபு பாரு மருத்துவமனைmap
Remove ads

கோலா குபு பாரு மருத்துவமனை (மலாய்: Hospital Kajang; ஆங்கிலம்: Kajang Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்டம், கோலா குபு பாரு நகர்ப் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மாவட்ட மருத்துவமனை ஆகும்.

விரைவான உண்மைகள் அமைவிடம், ஆள்கூறுகள் ...
Thumb
கோலா குபு பாரு மருத்துவமனை அமைவிடம்

சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்டத்தின் மேற்கில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, கோலா குபு பாரு, கெர்லிங், ராசா, பத்தாங்காலி, அம்பாங் பெச்சா பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குகிறது.

Remove ads

பொது

கோலா குபு பாரு மருத்துவமனை மருத்துவச் சிறப்பு சேவைகளை வழங்கும் ஒரு மாவட்ட மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இங்குள்ள ஏழு நோயாளிக் கூடங்களில் (வார்டுகளில்) 150 படுக்கைகள் உள்ளன. கோலா குபு பாரு மருத்துவமனை 13 முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.[2]

வரலாறு

கோலா குபு பாரு மருத்துவமனை 1936-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பழைய கோலா குபு நகரம் வெள்ளத்தால் அழிக்கப்பட்ட பிறகு இந்த மருத்துவமனை புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. அந்தக் கட்டத்தில், இந்த மருத்துவமனை கோலா குபு பாரு பகுதியைச் சுற்றியுள்ள பிரித்தானிய வீரர்கள், ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சேவை செய்தது.

தொடக்கத்தில், இந்த மருத்துவமனை 4 வார்டுகள், ஒரு நிர்வாக கட்டிடம் / வெளிநோயாளர் பிரிவு மற்றும் ஓர் அறுவை சிகிச்சை அறை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இந்த மருத்துவமனையின் தற்போதைய பரப்பளவு 37 ஏக்கர்; மற்றும் கட்டமைப்புகள் கொண்ட பகுதி ஏறக்குறைய 16 ஏக்கர் ஆகும்.[2][3]

Remove ads

புள்ளிவிவரங்கள்

2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்[4]

  • படுக்கைகள் - 150
  • அறுவை சிகிச்சைகள் - ?
  • பிரசவங்கள் - 65
  • அவசரப் பிரிவு சிகிச்சை - 27217 (2021)
  • மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டவர்கள் - 3895
  • சிகிச்சை பெற்றவர்கள் - 61213
  • சிறப்பு சிகிச்சை பெற்றவர்கள் - 2878
  • இரத்தச் சுத்திகரிப்பு செய்தவர்கள் - 7479
  • இறப்புகள் - 69

முகவரி

Hospital Kuala Kubu Bharu
44000 Kuala Kubu Bharu
Tel : +6(03) +603 - 6064 1333, +603 - 6064 1334, +603 - 6064 4032, +603 - 6064 4035
[5] Emel : h_kkb@moh.gov.my

இணையத் தளம்: jknselangor.moh.gov.my/hkkb/

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads