கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம்

மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் நகர மையப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் From Wikipedia, the free encyclopedia

கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம்map
Remove ads

கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம் அல்லது பெர்ஜெயா டைம்ஸ் சதுக்கம் (மலாய்; Berjaya Times Square KL; ஆங்கிலம்: Berjaya Times Square) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையம், புக்கிட் பிந்தாங் நகர மையப் பகுதியில், 203 மீ; (666 அடி) உயரத்தில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும்.[2]

விரைவான உண்மைகள் கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம் Berjaya Times Square Berjaya Times Square KL, பொதுவான தகவல்கள் ...

இது ஓர் இரட்டை கோபுரக் கட்டிடமாகும். இதில் தங்கும் விடுதி, காண்டோமினியம் (condominium) எனும் தளவீடுகள், உட்புறப் பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக மையங்கள் மற்றும் கடைவல வளாகங்கள் போன்றவை உள்ளன. இந்த இரட்டைக் கோபுரம் 2003-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

Remove ads

அமைவு

தரைப் பரப்பளவில், தற்போது இந்தக் கோபுரம், உலகின் பத்தாவது பெரிய கட்டிடமாகச் சாதனை படைக்கிறது. இதன் தரைப் பரப்பளவு 700,000 மீ2 (7,500,000 சதுர அடி). அத்துடன், இதுவரையில் ஒரே கட்டத்தில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கட்டிடம் என்றும் சாதனை படைக்கிறது. மேலும் இந்தச் சாதனை மலேசிய சாதனை நூலில் (The Malaysia Book of Records) இடம்பெற்று உள்ளது.[3]

இந்தக் கட்டிடம் 19-மாடி கடைவல வளாகங்கள், வணிக அலுவலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள், 1,200 சொகுசு சேவை அறைகள், 65 உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களைக் கொண்ட ஓய்வு மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பொழுதுபோக்கு ஈர்ப்பாக பெர்ஜெயா டைம்ஸ் பொழுதுபோக்கு பூங்கா (Berjaya Times Square Theme Park) உள்ளது.[4][5]

Remove ads

வரலாறு

கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம் அமைந்துள்ள இடம்; தொடக்கத்தில், இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, மலேசியச் செல்வந்தரும், கொடையாளருமான சியோங் யோக் சோய் (Cheong Yoke Choy) என்பவருக்குச் சொந்தமாக இருந்தது.

சியோங் யோக் சோய், கோலாலம்பூரின் தொடக்கக் கால உருவாக்குநர்களில் ஒருவர் ஆவார். தம் சொத்துகளில் பெரும்பகுதியை மலேசிய மக்களின் உடல்நலம் சார்ந்த செயல்பாடுகளுக்கும்; அறப் பணிகளுக்கும்; பள்ளிகளுக்கும்; நன்கொடையாக வழங்கி உள்ளார்.[6] இவரின் பெயரில் சியோங் யோக் சோய் தெரு; சியோங் யோக் சோய் சாலை என இரு சாலைகளுக்குப் பெயர் சூட்டப்பட்டு உள்ளன.

அதன் பின்னர், பெர்ஜெயா டைம்ஸ் சதுக்கத்தின் மேம்பாட்டிற்காக டான் ஸ்ரீ வின்சென்ட் டான் (Vincent Tan) என்பவரின் பெர்ஜெயா குழுமத்தால் (Berjaya Corporation) முழு நிலமும் வாங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடியும் வரையில் அந்தச் செல்வந்தரின் மாளிகை அங்கேயே இடிக்கப்படாமல் இருந்தது.[7]

Remove ads

திறப்பு

Thumb
பெர்ஜெயா சதுக்கம் கட்டப்படுவதற்காக இடிக்கப்பட்ட சியோங் யோக் சோய் மாளிகை (2019)

பெர்ஜெயா டைம்ஸ் சதுக்கம் அப்போதைய மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் செப்டம்பர் 29, 2003 அன்று முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.[8] முதலில் 1999-ஆம் ஆண்டில் திறக்கப்படுவதற்காக, நாள் குறிக்கப்பட்டது. இருப்பினும் 1997 ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாக, திறப்பு நிகழ்வு கால தாமதம் ஆனது.[9]

போக்குவரத்து

கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம்; கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் உள்ள இம்பி நிலையத்திற்கு வடக்கில் உள்ளது. மேலும், புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையத்திற்கு (Bukit Bintang MRT station) தென்மேற்குப் பகுதியில், நடந்து செல்லும் தொலைவிலும் உள்ளது.

காட்சியகம்

கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம்; காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads